இடுகைகள்

சூப்பர் ஆப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 ஜியால் முன்னேறும் துறைகள்! - போக்குவரத்து, சூப்பர் ஆப், விற்பனைத்துறை

படம்
  5 ஜி பயன்கள்  ஸ்மார்ட்போன் பயனாளர்கள் டேட்டா வேகம் பத்து மடங்கு அதிகரிக்கும். தரவிறக்க வேகத்திற்கு வட்டவடிவில் சுத்துவதை நீங்கள் பார்க்கும் துரதிர்ஷ்டம் நேராது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பது வேகமாகும்.  வீடு வீஆர் விளையாட்டுகளை எளிதாக விளையாடலாம். 8கே அளவிலான டிவிகளைப் பயன்படுத்தலாம்.  கல்வி  பெருந்தொற்றில் அறிமுகமான டிஜிட்டல் கல்வி இன்னும் வேகமாகும். நெடுந்தொலைவில் இருந்தாலும் கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்றுத் தரமுடியும்.  விற்பனை விரல் முனையில் தட்டினால் பொருட்கள் வாசலில் வந்து நிற்கும். குரல் வழி ஆணை, உடல்மொழி மூலம் நீங்கள் எளிதாக பொருட்களை வாங்கலாம். பணத்தை வேகமாக செலுத்தலாம். அமேசான் கோ போல கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.  வங்கி மொபைலில் இருந்தே வங்கியில் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வங்கிக்கு செல்வது என்பது மிக அரிதான நிகழ்வாக மாறும்.  விவசாயம்  பயிர் விதைப்பது தொடங்கி சாகுபடி வரையிலான அனைத்து விஷயங்களும் தொழில்நுட்ப ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்.  உற்பத்தித்துறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் சென்சார், கருவிகள

புதிய சூப்பர் ஆப்பில் என்ன இருக்கிறது? டாடா நியூ

படம்
  புதிதாக சந்தையில் சூப்பர் ஆப் ஒன்று களமிறங்கியுள்ளது. புதிதாக என்றால் இதற்கு முன்னால் ஏதாவது ஆப் இருக்கிறதா என மிகச்சிலர் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக.. மைஜியோ, பேடிஎம் ஆப் ஆப்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மை ஜியோ ஆப்பில் நீங்கள் அந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு தினசரி மளிகை தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், உடைகள், சினிமா, இணையம் வரையிலான சேவைகளைப் பெறலாம். இதில் பணத்தை பிறருக்கு அனுப்பும் சேவைகளையும் செய்யலாம். பேடிஎம் இந்த வகையில் பிரபலமாக இருந்தது. இப்போதுதான் பங்குச்சந்தை சரிவால் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. பேடிஎம் ஆப்பில் பேடிஎம் மால் என்ற வசதியைப் பயன்படுத்தி நிறைய பொருட்களை சேவைகளைப் பெறலாம்.  2016இல் அறிமுகமான மை ஜியோவில் 100 மில்லியன் பேர், 2010இல் அறிமுகமான பேடிஎம்மில் 100 மில்லியன் பேர் உள்ளனர். இப்போது அதாவது ஏப்ரல் 2022இல் அறிமுகமான டாடா நியூவில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். உள்ளனர் என்ற அர்த்ததை ஆப்பை தரவிறக்கம் செய்தனர் என புரிந்துகொள்ளுங்கள். இன்று வரையில் இந்த ஆப்களை அவர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று துல்லியமாக தெரியவில்லை.  சூப்பர் ஆப் என்பதன் அடிப்படையே

இந்தியாவில் சூப்பர் ஆப்பிற்கான தேவை உள்ளதா? வரிசை கட்டும் டாடா, ஜியோ, பேடிஎம்

படம்
    சூப்பர் ஆப்பின் தேவை இருக்கிறதா? இன்று நம் அனைவரின் போன்களிலும் ஷாப்பிங் தளங்களுக்கான ஆப் குறைந்தபட்சம் ஒன்றேனும் உள்ளது. இதுபோக பிற ஓடிடி தளங்களுக்கான ஆப்கள் தனி. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே ஆப்பில் இணைந்திருந்தால் அதுதான் சூப்பர் ஆப். சூப்பர் ஆப்பில் ஒரு வணிக குழுமத்தின் அனைத்து சேவைகளும், அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். இதன்மூலம் தேவையில்லாமல் தனித்தனியாக பல்வேறு ஆப்களை ஒருவர் தரவிறக்கும் அவசியம் இல்லை. இந்த சூப்பர் ஆப் ஐடியாவை டாடா குழுமமே முன்னதாக யோசித்து அதே வேகத்தில் அறிவித்துவிட்டது. டாடா குழுமம் இந்த சூப்பர் ஆப்பை வால்மார்ட் குழுமத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதற்கான பட்ஜெட்டாக வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃபிளிப்கார்ட் 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உணவு, உடை, வாழ்க்கை முறை, கல்வி, நிதி, பொழுதுபோக்கு என அனைத்து பிரிவுகளும் ஒரே ஆப்பில் உள்ளடங்கிவிடும். இதற்கடுத்த சூப்பர் ஆப் வாய்ப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் உள்ளது. இதன் மை ஜியோ ஆப் சூப்பர் ஆப்பாக மாறினால், கல்வி, மருத்துவமனை, பொழுதுபோக்கு, சில்லற