இடுகைகள்

ஸ்கூபி டூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாக் ஸ்பிரிட் ஆன்மாவை சாமுராயாக மாறி அடக்கும் ஸ்கூபி டூ! - அனிமேஷன்

படம்
  ஸ்கூபி டூ அண்ட் தி சாமுராய் ஸ்வோர்ட் (2009) ஹன்னா பார்பரா புரடக்‌ஷன்  வார்னர் பிரதர்ஸ்  ஸ்கூபி டூ டீமை அப்படியே ஜப்பானுக்கு தூக்கிச் செல்கிறார்கள். கதை அங்குதான் நடைபெறுகிறது. அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றில், தொன்மையான பிளாக் ஸ்பிரிட் என்ற உருவம் பாதுகாப்பு கவசத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திடீரென அந்த உருவம் அங்கிருந்து சக்திபெற்று கண்ணாடி பாதுகாப்புகளை உடைத்துக்கொண்டு தப்பி செல்கிறது.  சாமுராய் ஒருவரின் ஆன்மாவை பிரதிஷ்டை செய்த வாளைக் கொண்டுள்ள பிளாக் ஸ்பிரிட்டை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் உலகிற்கு ஆபத்து ஏற்படும். வேறு வழியில்லை என்பதால், பேய்களின் மர்மங்களை மோட்டார் வேனில் வந்து கோமாளித்தனங்களை செய்து கண்டுபிடிக்கும் ஐந்துபேர் கொண்ட உறுப்பினர்களான ஸ்கூபி டூ டீமின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் ஜப்பானுக்கு வந்து ஜப்பானிய பின்னணி இசையுடன் சாமுராய் ரோபோட்டுகளுடன் சண்டை போட்டு, புத்திசாலித்தனமாக திட்டங்களைப் போட்டு அருங்காட்சியக திருட்டுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.  ஃபிரெட், டெப்னே, வெல்மா, சேஜி, ஸ்கூபி டூ ஆகியோர் பொதுவாக என்ன செய்வார்கள்?

கோப்ளின் அரசரின் மகளை மீட்கும் ஸ்கூபி டூ குழு! - ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங்

படம்
                ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங் அனிமேஷன் படம் வார்னர் பிரதர்ஸ் - ஹன்னா பார்பரா இந்த படம் மாயாஜால மந்திரங்களைக் கொண்டது . கோப்ளின் அரசரின் மகளை பிடித்து வைத்துக்கொண்டு அவரின் சக்தியைப் பெற்று அனைவரையும் அடக்கியாள நினைக்கும் மேஜிக் கலைஞரை எப்படி ஸ்கூபி டூ , சேகி தோற்கடிக்கிறது என்பதுதான் கதை .    இந்த கதையில் வெல்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டதால் முழுக்கதையையும் தங்கள் பாணியில் ரகளையாக நகர்த்திச்செல்வது ஸ்கூபி டூ மற்றும் சேகி இணைதான் . கோப்ளின் அரசரின் இளவரசி , தோற்றுப்போன மாய தந்திரக்கலைஞரை நையாண்டி செய்கிறது . அதனை பிடித்துவிட்ட அவர் , அதன் சக்தியை வைத்து பிற மந்திரப் பொருட்களை வயதான கலைஞர் ஒருவரிடமிருந்து பெறுகிறார் . குறிப்பிட்ட தினத்தில் கோப்ளின் அரசரையும் அவரது கூட்டத்தையும் உயிர்பெறச்செய்து , அவரின் கையில் உள்ள ஆயுதத்தைப் பெற்றால் உலகத்தை ஆள முடியும் என்பது மாய தந்திரக்கலைஞரின் பேராசை . இதனை படாதபாடுபட்டு அறியும் சேகி , ஸ்கூபிடூ இணை பூசணிக்காய் ஒன்றின் உதவியுடன் சூனியக்காரிகளை சந்திக்கின்றனர் . அவர்களின் பறக்கும் துடைப்பத்தைப்

பிராங்கென்ஸ்டைன் பரம்பரை வாரிசாக மாறும் வெல்மா! - ஸ்கூபி டூ எதிர்கொள்ளும் புதிய சவால்

படம்
              ஸ்கூபி டூ பிராங்கன் க்ரீப்பி அனிமேஷன் படம் ஹன்னா பார்பரா , வார்னர் பிரதர்ஸ் வெல்மாவின் சொந்தங்களை தேடி மிஸ்டரி மெஷின் குழு செல்கிறது . அங்கு வெல்மாவுக்கு சொந்தமான மூதாதையரின் நிலம் , சொத்துக்கள் உள்ளன . அதனை அவளுக்கு சொத்துரிமைப்படி வழங்குவதாக வழக்குரைஞர் ஒருவர் கூறுகிறார் . அப்புறம் என்ன ? ஆகா சொத்து என அங்கு கிளம்பி செல்லும் குழு , அங்கு நடக்கும் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து மீள்கிறார்கள் . உண்மையில் வெல்மாவுக்கு சொத்து கிடைத்ததா , பிராங்கன்ஸ்டைன் வம்சாவளி வாரிசு வெல்மாதானா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதா என்பதுதான் இறுதிக்காட்சி . இந்த தொடரில் மிஸ்டரி மெஷின் குழுவினரால் பித்தலாட்டங்கள் வெளிப்பட்ட அனைத்து எதிரிகளும் அவர்களுக்கு எதிராக கைகோக்கிறார்கள் . குழுவிலுள்ளவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களின் உளவியலை அடித்து நொறுக்கி டி 20 ஆட முழு குழுவுமே பீதிக்குள்ளாகிறது . இதில் முதலில் கண்விழிப்பது ஃபிரெட் மற்றும் வெல்மாதான் . அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களைச் சுற்றி நடக்கும் சதிவலைகளை அறுக்கிறார்கள்

தீவு மக்கள் மீது திடீரென கோபம் கொண்டு வேட்டையாடும் தொன்மை கடவுள்! - அலோகா ஸ்கூபி டூ

படம்
                அலோகா ஸ்கூபி டூ ஹவாயிலுள்ள அழகான தீவுதான் அலோகா . அங்கு அரசுக்கு முக்கியமான வருமானம் சுற்றுலா பயணிகளும் , கடலில் மீன் பிடித்து விற்பதும்தான் . இப்படி இருக்கையில் திடீரென அ்ங்குள்ள தொன்மையான கடவுளின் ஆன்மா அம்மக்களை தாக்க தொடங்குகிறது . விரைவில் அங்கு கடலில் அலைச்சறுக்கு போட்டி நடக்கவுள்ளது . இதனால் அந்த நகரின் மேயர் பதறுகிறார் . அங்கு நிலங்களை விற்று கட்டிடங்களை கட்டி எழுப்ப நினைத்தவர்களும் தொழிலை இழக்கின்றனர் . உண்மையில் திடீரென நடக்கும் அந்த தாக்குதலின் பின்னணி என்ன ? சிறு மனிதர்களை அனுப்பி சுற்றுலா பயணிகளை அடித்து உதைத்து விரட்டும் நோக்கம் என்ன ? வெளியாட்களை மெல்ல உள்ளூர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு சூழல் மாறுகிறது . இந்த சூழ்நிலையை எப்படி மிஸ்ட்ரி மெஷின் குழு கண்டுபிடிக்கிறது என்பதுதான் கதை .    ஹவாய் மக்களின் கலாசாரம் , அவர்களின் நம்பிக்கை , உணவு என நிறைய விஷயங்களை அனிமேஷன் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் . மக்களிடையே உள்ள நம்பிக்கையை வைத்து எப்படி சிலர் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை ஃபிரெட் , டெப்னி , வெல்மா , சே

தொன்மையான ரத்தக்காட்டேரி உயிர்பெற்று வந்து திருமணம் செய்ய முயற்சித்தால்.... துப்பறியும் ஸ்கூபி டூபி டூ குழு

படம்
          ஸ்கூபி டூ மியூசிக் ஆப் தி வாம்பயர் அனிமேஷன் வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன்   பேய்களையும் , குற்றவாளிகளையும் பிடித்து களைப்பில் இருக்கும் மிஸ்டரி மெஷின் குழு , ஓய்வெடுக்க நினைக்கிறது . இதற்காக அவர்கள் ரத்தக்காட்டேரிகள் உள்ள ஊருக்கு செல்கிறது . அங்கு வின்சென்ட் என்பவர் , பரம்பரை வழியில் ரத்தக்காட்டேரிகள் பற்றி கதைகளை எழுதி வருகிறார் . இதற்கென தனது அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியிருக்கிறார் . ஆண்டுதோறும் ரத்தக்காட்டேரிகளை பெருமைப்படுத்தும் விழாவும் அவரது ஊரில் நடத்தப்படுகிறது . ஆனால் ரத்தக்காட்டேரிகளைப் பற்றிய காதல் நூல்களை எழுதிவரும் காலத்தில் அவரின் திகில் எழுத்துகள் விற்கமாட்டேன்கிறது . இந்த நிலையில் அவரது அருங்காட்சியகத்தில் உள்ள ரத்தக்காட்டேரிக்கு உயிர் வருகிறது . மக்களைக் கொல்லுவதற்காக துரத்துகிறது . குறிப்பாக , ரத்தக்காட்டேரி நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் புதுமையான தொன்மை ரத்தக்காட்டேரியின் சக்திக்கு அடிமையாகிறார்கள் . அதேநேரம் அங்குள்ள நகர மேயர் ரத்தக்காட்டேரி என்ற வார்த்தையை வெறுப்பவர . அவர் மக்களைத் திரட்டி ரத்தக்காட்டேரி அருங்காட்சியகம் , விழா ஆகியவற்றைத்

கார் பந்தய சதியை வெல்ல அண்டர்டேக்கர் ஸ்கூபி டூ குழுவினரோடு போடும் ஒப்பந்தம்! - ஸ்கூபி டூ அண்ட் தி கர்ஸ் ஆப் ஸ்பீட் டிமோன்

படம்
                ஸ்கூபி டூ அண்ட் தி கர்ஸ் ஆப் தி ஸ்பீட் டிமோன் அனிமேஷன் வார்னர் பிரதர்ஸ் - பென்னா பார்பரா     அமெரிக்காவில் நடைபெறும் டபிள்யூ டபிள்யூ இ போட்டியாளர்கள் கார் பந்தயம் ஒன்றில் பங்கேற்கிறார்கள் . அதில் அவர்களை அழிக்க இதுவரை சந்திக்காத தீய சக்தியை எதிர்கொள்கிறார்கள் . உண்மையில் அந்த தீய சக்தி யார் , எப்படி தோன்றியது , அதன் நோக்கம் என்ன என்பதை ஸ்கூபி டூ சேகி இணையர் கோமாளித்தனங்களை செய்து கண்டுபிடிக்கிறார்கள் . போட்டியைக் காண நேரடியாகவே மைதானத்திற்கு ஸ்கூபிடூவும் சேகியும் தங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள் . போனவர்கள் வண்டியை போர்டபிள் சாண்ட்விச் கடையாக மாற்றி ஜாலியாக போட்டியைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . வாடிக்கையாளர்களிடம் காசை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சாண்ட்விட்சையும் பர்கரையும் ஸ்கூபியும் சேகியும் சாப்பிட்டு களேபரம் செய்துகொண்டிருக்கிறார்கள் . அப்போதுதான் வெல்மா , டெப்னி , டெப்னியின் காதலன் ஆகியோரைக் கொண்ட குழு வருகிறது .      போட்டி நடைபெறும் இடம் கரடுமுரடானது . போட்டியாளர்களைப் போலவே

ஸ்கூபி டூ தியரிகள் - நாம் அறியாத ரகசியங்கள்!

படம்
1960 ஆம் ஆண்டு வெளியான ஹன்னா பார்பரா சீரிஸைச் சேர்ந்த ஸ்கூபி டூ மிகப் பிரபலமான அனிமேஷன் தொடர். இத்தொடர் பற்றிய பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம். இங்கு முடிந்தவரை சில விஷயங்களுக்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஸ்கூபி டூ என்பது ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்ற நாயை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையே விண்வெளிப்போர் இருந்தது. இதற்கு ரசிகர்களின் தியரி, ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஸ்கூபி டூ, மனிதர்களின் பேச்சை புரிந்துகொள்ளக்கூடியது. மிஸ்டரி.இன்க் எனும் கம்பெனியின் நான்கு ஆட்களோடு ஒன்றாக சுற்றுவது ஸ்கூபிடூவின் வேலை. சேஜி எனும் கதாபாத்திரம் ஸ்கூபியோடு எப்போதும் கூடவே இருப்பது. இருவரும்தான் அனைத்து விஷயங்களிலும் உள்ளே நுழைந்து கண்டுபிடிப்பது. எல்லாமே குறியீடு ஸ்கூபி டூ பேய் மர்மங்களை துப்பறியச் செல்லும் அனைத்து இடங்களுமே பேய் பங்களா மாதிரியே  இருக்கும். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. அதைக் குறிக்கும் குறியீடுகளாக சுரங்கம், மனிதர்கள் இல்லாத பாழடைந்த நகரம் என குற்றம் நடைபெறும் இடங்களாக காட்டுவார்க