இடுகைகள்

ஆன்டி சோசியல் டிஸார்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமையும், பெற்றோர்களின் அன்பும் அக்கறையும் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடு

படம்
  சாலையில் செல்லும் வாகனங்களில் சிலர் உர்ரென உருமிக்கொண்டு வேகமாக சென்று அடுத்த சிக்னல்களில் நிற்பார்கள். பச்சை விளக்கு, சிவப்பு விளக்கு ஆகியவற்றை சீரியல் பல்புகளாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்கிப் பாய்வார்கள். யாரையாவது விபத்துக்குள்ளாக்கி கையில் கட்டு போட்டாலும் பெற்றோர் பைக் எடுக்க விடமாட்டேன் என்கிறார்கள் என நண்பர்களிடம் புலம்புவார்கள்.  சென்னையில் காமராஜர் சாலையில் தங்களது பைக் ஓட்டும் திறமையைக் காட்டுபவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள். வேகம் மட்டும்தான் இவர்களின் கண்களுக்குத் தெரியும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாத சம்பளக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அடிக்கடி காவல்துறையில் சிக்கி அபராதம் கட்டுவார்கள். எப்போதும் போல கவாஸாகி நின்ஜா போல மைலேஜ் ஹீரோ பைக்கை வடிவமைத்து சிக்னலில் முந்திச்செல்வார்கள்.  இப்படிப்பட்ட எல்லை மீறும் மனிதர்களை ஊடகங்கள், டெய்லி புஷ்பம், பூந்தி போன்ற பத்திரிகைகள் சமூக விரோதி என அழைத்தாலும் சைக்கோ பாத் என அழைத்தாலும் மருத்துவத்துறைப்படி இவர்களை ஆன்டி சோஷியல் டிஸார்டர் பாதிப்பு கொண்டவர்கள் எனலாம். இப