இடுகைகள்

பிருந்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

படம்
  ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை  கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு  ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம்  மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.  மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை உள்ளது.  ஆனால் மௌனாவுக்

லவ் இன்ஃபினிட்டி: காதல் கனவு நிறைந்த மனது

படம்
25 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரசா, தீரன் குமார். ஆண்டவனின் அருள்தான் என்று சொல்லவேண்டும். அப்போது என்றோ அனுப்பிய இமெயிலுக்கு கதிர் பத்திரிகையிலிருந்து அழைத்தார்கள். அழைத்தவர் பெயர் கண்ணன். அன்று அடைந்த சந்தோஷத்தை பின்னொரு நாளில் அடைவேனா என்றளவு சந்தோஷப்பட்டேன். இத்தனைக்கும் நான் காக்கை அமைப்பில் மொழிபெயர்த்திருந்தது ஒரே ஒரு நூல்தான். அதற்கும் இரண்டாயிரம் ரூபாயைத் தாண்டி வேறு எதுவும் தரவில்லை. அங்கு வேலை செய்ததற்கு அதுவும் சரியாக போனால் எனக்கு என்ன மிஞ்சும்? இதைப்பற்றியெல்லாம் கவிக்குமாரும் கவலைப்படவில்லை. நூறு பர்சென்ட் கலைஞன் பாபுவும் யோசிக்கவில்லை. என்னைப் பற்றி யோசித்து உருப்படுவானா என்று யோசித்தது மூன்று பேர்தான். என்னை பெத்தவர்கள், அடுத்து பிருந்தா. சோத்துக்கே சாகிறப்போ இவ வேற என எரிச்சல் மூலாதாரத்திலிருந்து முட்டிக்கொண்டு கிளம்பியது. ஆனால் இந்த பிரியத்தை உரிமையை கோபத்தை நீ காதலித்த ஒரு பெண்ணிடமாவது பார்த்தாயா என மனசாட்சி கேள்வி கேட்டது. எப்படியோ, 120 ரூபாயைத் தேற்றி சென்னை வந்து சேர்ந்தேன். பத்திரிகை உலகை உய்விக்க சூரியன் வந்துவிட்டான் என்

லவ் இன்ஃபினிட்டி: காதலை இப்படியும் சொல்லலாம்!

படம்
vicky m\pinterest 24 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ககன்சிங், சசாங் கௌர் உண்மையில் பிருந்தாவிடம் இரண்டு மாதங்களாக பேசவில்லை. திடீரென அவளிடம் பேசவேண்டுமென தோன்றியபோது, காக்கைகள் அமைப்பில் அதிகாரப் போட்டி தொடங்கியிருந்தது. ஓர் அமைப்பு, புகழ்பெறாதவரை காசு கிடைக்காதவரை யாரும் அதனைத் தலையில் தூக்கி திரியமாட்டார்கள். ஆனால் புகழடைந்து விட்டால் ஏற்றிய கிரீடத்தை கீழிறக்குவது கடினம். நான், என்னால் என்ற வார்த்தைகளை மெல்ல பல நாக்குகளிலிருந்து வரத்தொடங்கியவுடன் அங்கு இடத்தை காலிசெய்துவிட்டேன். அங்கிருந்தபோது போனில் டவர் கிடைப்பது கடினம். எனது சாம்சங் குரு, எப்போது முடங்கும் என்றே தெரியாத நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள போஸ்ட் ஆபீசில் அஞ்சல் அட்டைகளை வாங்கி வீட்டுக்கு அம்மாவுக்கு மட்டும் கடிதம் எழுதி வந்தேன். அப்போது நான் தங்கியிருந்த இடத்தின் முகவரியை எழுதி அனுப்பினேன். ஏன் அப்படிச் செய்தேன். அப்பன் நம்ப வேண்டுமே? அதற்காகத்தான். அதை பிருந்தா வாங்கியிருப்பாள் என்று எனக்கு எப்படித் தெரியும்? சாரங்கியோடு சமாளித்து நாட்களை ஓட்டுவதே சிரமமாகிக்கொண்டிருக்க, இந்

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லப் போறேன்!

படம்
behance 19 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ராஜா தேசிங்கு, மியான் வாட்ஸ் நாம எல்லாத்தையும் படிச்சிருப்போம் தெரியும்னு நினைப்போம். ஆனா, உண்மை என்னன்னா, தேவைப்படும்போது அதனை மறந்திருவோம். நம் அனுபவத்துல பதிஞ்ச விஷயங்கள் மட்டும்தான் நம்மை எப்போதுமே காப்பாத்தும். மத்த விஷயங்கள் எல்லாம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நம்மை கைவிட்டுவிடும். இங்க அறிவுங்கறதும், அனுபவம்கிறதும் வேறுவேறு. நீங்க ஓஷோ, வேதாத்திரின்னு பல பண்டல் புத்தகங்கள ஷெட்யூல் போட்டு படிக்கலாம். இப்போ பாருங்க, காதலோ, காமமோ, ஒரு உறவு குறித்தோ நெருக்கடி வருது. அதில் எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போவுது. இதில நீங்க என்ன செய்ய முடியும்? உங்க அறிவு உதவும்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் இல்லை. நான் சந்திச்ச எல்லா பெண்களிடம் நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். அதாவது, நாம சாதிக்க முடியாததை இவன் சாதிக்கணும்னு ஒரு எண்ணம். தூண்டுதல் இருக்கு. ஆனால் அது ஏன்? அப்படி இருக்கணும்னு என்ன இருக்கு? நான் அவங்களுக்கு  எழுதின letter லேயும் அன்னைக்கு அப்படித்தான் எழுதியிருக்கேன். ஆகா வைரஸ் எப்படி பரவுது பாத்தீங்