இடுகைகள்

சுனில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

படம்
  இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.  படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான்.  அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோசிக்கும் வகையில் நி

ஏழை இளைஞனின் வாழ்க்கையை தகர்க்கும் சாதிய வன்மம்! கலர் போட்டோ 2020! ச சந்தீப் ராஜ்

படம்
              கலர் போட்டோ Director: Sandeep Raj Writers: Sandeep Raj , Sai Rajesh Neelam Stars: Suhas , Chandini Chowdary , Sunee     சாதி , நிறம் காரணமாக புறக்கணிக்கப்பட்டு உயிரை விடும் இளைஞனின் வாழ்க்கைதான் கதை . விஜயவாடா , மச்சிலிப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட ஆணவக்கொலை பற்றிய படம் . ஜெயகிருஷ்ணா , தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் . காலையில் பால் கறந்து ஊற்றும் வேலைகளை செய்துவிட்டு கல்லூரிக்கு வருகிறான் . பொறியியல் படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் அவன் கனவு . பல்வேறு இடங்களிலும் அவன் திறமை தாண்டி அவன் சாதி , நிறம் பலருக்கும் குறையாக தெரிகிறது . இதனை எந்த சமரசமின்றி எதிர்க்கிறான் . இதற்கான பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளை சந்திக்கிறான் .   கல்லூரியில் மேல் சாதியைச்சேர்ந தீப்தி என்ற பெண்ணை கடவுளின் வேஷத்தி ல் பார்க்கிறான் . நண்பன் சொன்னது போல உடல் புல்லரிக்க அப்போதே காதலில் விழுகிறான் . ஆனால் அதனை அந்த பெண்ணுக்கு சொல்ல முடியவில்லை . காரணம் . தான் இருக்கும் நிறம் , சாதி என பல தடைகள் முன்னே

தேசியவாதத்தின் தந்தைகள் உருவானது இப்படித்தான்!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் பேராசிரியர். சுனில் பி இளையிடோம் கேரளத்தின் முக்கியமான கலாசார விமர்சகர் சுனில், எழுதுவதை விட இவரின் பொதுமேடைப் பேச்சு அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிறது. இவரின் முக்கியமான படைப்பு  political unconsciousness of Modernism .  மார்க்சியத்தை புகழ்ந்து மட்டும் பேசாமல் அதன் பிரச்னைகளை பட்டென போட்டு உடைப்பதோடு அண்மையில் பாஜக முன்னெடுத்து வரும் தேசியவாத வரலாறு, நாராயணகுரு என பொதுமேடையில் அசத்தலாக பேசிவருகிறார். இசை, இலக்கியம், நடனம் என்பதைத் தாண்டி தேசியவாதம், அதன் வரலாறு வரை பேசுகிறீர்கள். உங்களது எழுத்திலும் பேச்சிலும் கூட தத்துவத்தின் சாயல் உள்ளது. எப்படி இப்படி ஒரு பாணியை பிடித்தீர்கள்.  கலாசார வரலாற்றில் நவீனத்தன்மையை ஆராய்வதே என்னுடைய பாணி. நான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளை இம்முறையில் செய்துள்ளேன். ஒரே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை  நோக்கியே எழுதவேண்டும் பேசவேண்டும் என்பதில்லை. மார்க்சும் இம்முறையில் எதையும் வலியுறுத்தியவரில்லை. நான் கைக்கொள்ளும் முறையில் தத்துவத்தில்  சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால், நான் இம்முறையை அனைவருக்கும் பரிந்துரைக்க

சிறுபிள்ளைத்தனமான காமெடி - ரசிக்கலாம் பாஸ் ஆராயாதீங்க!

படம்
சில்லி ஃபெலோஸ் இயக்கம்: பீமனேனி ஸ்ரீனிவாச ராவ் கேமரா: அனிஸ் தருண்குமார் இசை: ஸ்ரீவசந்த் வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் படத்தின் தெலுங்கு ரீமேக். அலரி நரேஷ்(வீரபாகு), சுனில்(சூரி) இருவரின் அட்டகாச கெமிஸ்ட்ரியில் படம் காமெடியில் கொடி கட்டுகிறது. ஜாக்கெட் ஜானகி ராமன் எம்எல்ஏவின் வலதுகரமான அலரி நரேஷ், செய்யும் அலப்பறைகள்தான் படத்தை ரசிக்க வைக்கின்றன. இலவச திருமணம், பத்து லட்சம் வாங்கி போலீஸ் வேலை வாங்கித் தருவது என செய்யும் உல்டா புல்டா வேலைகளால் சுனில், சித்ரா சுக்லா ஆகியோர் பரம வெறியாகி இவரைத் துரத்துவதே கதை. ஜாக்கெட் ஜானகி ராமனாக, ஜெயப்பிரகாஷ் ரெட்டி பின்னி எடுத்திருக்கிறார். புஷ்பாவாக, நந்தினிராய் கிரிப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி படம் முழுக்க புஷ்பாவிடம் கையெழுத்து வாங்க முயற்சிக்கும் சுனிலின் காமெடி கைவரிசை பின்னி எடுக்கிறது. சித்ரா சுக்லாவை என்ன செய்வது என இயக்குநருக்கும் தெரியவில்லை நமக்கும் தெரியவில்லை. பாடல்கள் கடனே என்று கடக்கின்றன. சீரியசா, காமெடியா என அவரும் முழிக்கிறார். லாஜிக் மறந்து ஜாலியாக ரசிக்கலாம். -கோமாளிமேடை டீம்