இடுகைகள்

ஆர் சி மதிராஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எளிமையும் வசீகரமுமான வாழ்க்கையை ஒளிரச் செய்யும் பாடல்களின் அணிவகுப்பு - காலமெல்லாம் கண்ணதாசன்

படம்
         காலமெல்லாம் கண்ணதாசன் ஆர் சி மதிராஜ் இந்து தமிழ்திசை பதிப்பகம் இந்த நூலின் மதிராஜ், மொத்தம் முப்பது கண்ணதாசன் பாடல்களை எடுத்துக்கொண்டு அப்பாடல்கள் ஏற்படுத்தும் மன உணர்வுகளை திரைப்படத்திற்குள்ளே, அதைத்தாண்டி ஏற்படுத்தும் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது பாடல்களைப் பற்றி நீங்கள் படித்ததும். அதைக் கேட்க முயல்வீர்கள். திரும்ப அப்பாடல்களை கேட்பதன் வழியாக கண்ணதாசனின் மேதமையை உணர முயல்வோம். உண்மையில் நூலாசிரியர் அதைத்தான் விரும்புகிறார் என உறுதியாக கூறலாம். நாளிதழில் தொடராக வந்த காரணத்தாலோ என்னவோ, நடப்புகால சம்பவங்களை சில பாடல்களுக்குள் கூறுகிறார் மதிராஜ். ஆனால் அதெல்லாம் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு பாடல் இயக்குநர் சூழல் சொல்ல, பாடலின் மெட்டு கேட்டு உருவாக்கப்படுகிறது. அதை பின்னாளில் கேட்பவர், தான் உணர்ந்த விஷயங்களுக்கு ஏற்பட அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் மாறும் காலத்திற்கு ஏற்ப யோசித்துப் பொருத்துவது எந்தளவு பொருந்தும் என்று புரியவில்லை. கண்ணே கலைமானே, செந்தாழம் பூவில், உள்ளத்தில் நல்ல உள்ளம், நெஞ்சம் மறப்பதில்லை, நான் நிரந்தரமானவன் ஆகிய அத்தியாயங்கள் சிறப்ப