இடுகைகள்

தேசியமயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிகள் தேசியமயம் - 50 ஆண்டுகள்- என்ன நடந்தது?

படம்
வங்கிகள் தேசியமயம்: 50 ஆண்டுகள் நிறைவு! வங்கிகள் தேசியமயமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று 14 வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றியது. ரிசர்வ் வங்கி வரலாற்றில் 1947க்குப் பிறகு அமலான முக்கியமான நிதிச் சீர்த்திருத்தம் இதுவே. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொண்ணூறுகளில் நடைபெற்ற தாராளமயமாக்கலோடு பொருளாதார வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர். வங்கிகள் தேசியமயமானது காங்கிரசுக்கு அன்று ஆதாயம் அளித்தது. ஆனால், பின்னாளில் அரசுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.  அன்றைய இந்தியாவில்  தனியார் வங்கிகள் செயற்பட்டு வந்தாலும், அவற்றின் மீது பெரியளவு நம்பிக்கை உருவாகவில்லை. மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது தினசரி செய்தியாக மாறி வந்தன. 1951-68 வரையிலான காலத்தில் தனியார் வங்கிகள் தொழில்துறைக்கு 68 சதவீத கடன் தொகைகளையும், விவசாயத்திற்கு 2 சதவீத கடன்களையும் அளித்தன. அக்காலகட்டத்தில்தான் கிராமங்களிலுள்ள விவசாயத்துறைக்கு உதவுவது போல வங்கிகள் தேசியமயம் என்ற இந்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.