ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!
365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும். நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது. நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...