இடுகைகள்

ஈர்ப்புவிசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளி வீரர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  விண்வெளியில் உள்ள குறைந்த ஈர்ப்பு விசையை, மைக்ரோகிராவிட்டி(Micro Gravity) என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  விண்வெளியில் ஆறுமாதம் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு, உடலில் 20 சதவீத எலும்பு அடர்த்தி குறைகிறது.  விண்வெளியில் முதன்முறையாக உணவு உண்டவர் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான யூரி ககாரின் (Yuri Gagarin). வோஸ்டாக் 1 (Vostok 1)விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றவர், அங்கு மாட்டிறைச்சியும் ஈரலும் கலந்த பாஸ்தா உணவை உண்டார்.   உலர வைக்கப்பட்ட இறைச்சி, பால் பொருட்கள், பருப்புகள், ஈரப்பதம் குறைந்த பிஸ்கெட்டுகள், சாக்லெட், நூடுல்ஸ்,பாஸ்தா  ஆகிய உணவுப் பொருட்களை விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி அமைப்புகள் வழங்குகின்றன. வழங்கப்படும் உப்பும், மிளகும்  நீர்ம வடிவில் இருக்கும். தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வீரர்களுக்கென 100க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் கொண்ட பட்டியல் உள்ளது.  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள் (3 வேளை) வழியாக வீரர்களுக்கு 3,300 கலோரிகள் கிடைக்கின்றன. சாப்பிட்டபிறகு மீதமாகும் உணவுக்கழிவுகளை அதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட க

விண்வெளி மர்மங்களை ஆராயும் ஆய்வுக்கூடங்கள்!

படம்
  ஆராய்ச்சிக்கூடங்கள்! விண்வெளிக்குச் சென்று பால்வெளியின் மர்மங்களை அறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதேவேளையில் இங்கிருந்தபடியே நியூட்ரினோ, மின்காந்த கதிர்வீச்சுகளைக் கண்டறியும் சோதனைகளும் குறைவின்றி நடக்கின்றன. அவை பற்றி பார்ப்போம்.  நியூட்ரினோ ஆய்வகம் (Protodune) நியூட்ரினோ துகள்களைக் கண்டுபிடிக்கும் இந்த ஆராய்ச்சிக்கூடம், பிரான்சுக்கும், ஸ்விட்சர்லாந்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த நியூட்ரினோ மையத்தில் 800 டன்கள் ஆர்கன் திரவ வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது. செர்ன் மையத்தில் டியூன் அமைப்பு சோதிக்கப்பட்டது. நியூட்ரினோ துகள்களின் தன்மை, அதன் எதிர்தன்மை கொண்ட துகள்கள் ஆகியவற்றை இதில் சோதித்து பார்க்க முடியும்.  காமாக்கதிர் ஆய்வகம் (HIGH-ALTITUDE WATER Cherenkov Reservatory) மெக்சிகோவில் அமைந்துள்ள காமா கதிர்களை ஆராய்ச்சி செய்யும் ஆய்வகம் இது. பிகோ டி ஒரிஸாபா எரிமலையின் நிழல் போல அமைந்துள்ள ஆய்வகத்தில் 300 இரும்பு டேங்குகள் உள்ளன. விண்வெளியிலிருந்து வரும் காமாகதிர்களை நீரில் செலுத்தி அதன் விளைவை ஆராய்வதே நோக்கம்.  ஈர்ப்புவிசை ஆய்வகம் (LASER INTERFEROMETER GRAVITATIONAL-WAVE OBSERV

விண்வெளி பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன?

படம்
  விண்வெளி பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன? வானில் மிதந்தபடி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவதை கவனித்திருப்பீர்கள். சாதாரணமாக பூமியில் ஒரு வேலை செய்யும்போதே, பல்வேறு பிரச்னைகள் உண்டு. எப்படி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் விண்வெளி உடை அணிந்து வேலை செய்கிறார்கள்? விண்வெளி வீரர்களை இதற்கென தயார் செய்கிறார்கள் என்பதே உண்மை. விண்வெளி மையங்கள், வீரர்களுக்கு பல நூறு மணிநேரங்கள் இதற்காக கடுமையாக பயிற்சியளித்து அவர்களை விண்வெளியில் எச்சூழலையும் சமாளிக்கும்படி தயார் செய்கிறார்கள். இதில் மூன்று பிரிவு உண்டு. புதிதாக பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலில் ஓராண்டு அடிப்படை பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவத் திறன்கள் மற்றும் சர்வதேச விண்வெளி மையம் குறித்து கற்பது அவசியம். இதோடு ஸ்கூபா டைவிங் குறித்தும் கற்றுக் கொடுப்பார்கள்.  முதல் பகுதி நிறைவு பெற்றபிறகு, அடுத்தாண்டு பயிற்சிகள் இன்னும் தீவிரமாகும். சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு கற்றுத் தரப்படும். விண்கலங்களில்

திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?

படம்
    ரியலா ? ரீலா ? 1. திகில் , திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும் . ரியல் : திகில் , திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள் . அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும் . வியர்க்கும் . ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது , நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது . இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை . பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் . ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது . வேறொன்றுமில்லை . 2 . உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி , மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் . ரியல் : முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று

பூமி சுற்றுவதை நாம் ஏன் அறிய முடிவதில்லை?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பூமி சுற்றுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை? காவேரி ஆற்றை படகில் நீங்கள் கடக்கிறீர்கள் என்றால் அப்போது ஆற்றில் ஏற்படும் சுழலை நீங்கள் உணர்வீர்கள். காரணம் அதன் வலிமை அப்படி. படகில் செயல்படும் துடுப்பு விசையை விட சுழலின் விசை அதிகமாக இருக்கும்போது அதனை நீங்கள் உணர முடியும்.  பூமி, விண்வெளியில் சுற்றும் வேகம் மணிக்கு ஆயிரம் கி.மீ வேகம்(இங்கிலாந்து அடிப்படையில்). இதனை உணர முடியாத தற்கு காரணம், நம்மீது செயல்படும் ஈர்ப்புவிசைதான்.  நன்றி: பிபிசி