இடுகைகள்

மனச்சோர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உளவியல் பிரச்னைக்கு நேரடி தீர்வு!

படம்
  உளவியல் சிகிச்சை என்பது முதலில் நோயாளியை அடிப்படையாக கொண்டு இயங்கியது. அதாவது, தனக்கு நேர்ந்த பிரச்னைகளை அனுபவங்களை அவர் கூறுவது சிகிச்சையில் முக்கியமான அங்கம். இந்த வகையில் மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு, உணர்வுரீதியான வலி, வேதனை, குண இயல்புகளின் மாற்றம் ஆகியவற்றை அறிந்துகொண்டார். இந்த வகையில் சிகிச்சை அளிப்பதை இன்சைட் என்று ஆஸ்திரிய அமெரிக்க உளவியலாளர் பால் வாட்ஸ்லாவிக் குறிப்பிட்டார்.  உலகில் பலரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஒருவர் துயரத்தில் முழ்கியிருந்தால் அவரைப் பற்றி ஆழ்ந்து அறிவது முக்கியம் என்று பால் கூறினார். இதனால், அவர் பிரச்னைகளின் மீது நேரடியான சிகிச்சையை செய்தார். அதற்கு முன்னர் வரை ஒருவரின் கடந்தகாலத்தை அறிந்து பிறகே நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை தீர்க்க நினைத்தனர். ஆனால் இந்த முறை நோயாளியை மேலும் துயரத்தில் தள்ளியது. எடுத்துக்காட்டாக, ஒருவரை அன்பாக பார்த்து வளர்த்த அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவரது மகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் தாய் இறந்ததைப் பற்றி நினைவுபடுத்துவது மேலும் வலியை வேதனையை உருவாக்கும். இ

மெல்ல தற்கொலைக்கு தூண்டும் குறைபாடு - மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் -எம்டிடி

படம்
  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, எண்டோவ்மென்ட் பாலிசி கட்ட வேண்டிய காலம் என சம்பாதிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். பொறுப்புகள் மனதிற்கு சுமையாகத் தோன்றும்போது மனச்சோர்வு உருவாகிறது. இதனை ஒருவர் எளிதில் கையாள முடிந்தால் வெளியே வந்துவிடலாம். ஆனால் மனச்சோர்வு புதிர்ப்பாதையாக தோன்றும்போது, அவர்களுக்கு திகைப்பாகிவிடும்.  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டரைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதலில் ஏற்படும் மனச்சோர்வுக்கு மட்டுமே காரணம் இருக்கு்ம். அதாவது சில வகை தூண்டுதல். அதற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சோகம் என்பதை விட அனைத்திலும் எரிச்சல் இருக்கும். தினசரி செய்யும் செயல்களிலும் அது தீவிரமாக வெளிப்படத் தொடங்கும்.  பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மனச்சோர்வு குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சாப்பிடுவதைக் கூட ரசிக்க முடியாது. செய்கிமா 2 மெட்டல் இசையைக் கூட ரசிக்க மாட்டார்கள். சரியாக தூங்க முடியாது. உடலில் வலி இருப்பது போல தோன்றும். அவர்களுக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிய

மனநலக்குறைபாடு கொண்டவர்களோடு மல்லுக்கட்டு! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  7.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உடல்நலனோடு மனநலனை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. நாம் அமைதியாக இருந்தாலும் உளவியல் பிரச்னை கொண்டவர்கள் ஏதாவது பிரச்னையை செய்துகொண்டே இருக்கிறார்கள். நமக்கு தொடர்புடையவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.  இதன் பொருட்டு சில சமயங்களில் நமக்கே பாதகமான முடிவுகளைக் கூட நாம் எடுக்கவேண்டியுள்ளது.  அண்மையில் அலுவலகத்தில் சேர்ந்தவர், இதுபோல குறைபுத்தி கொண்டவர்களால் பாதிக்கப்பட்டார். என்னோடு டீ குடிக்க வருவதால் அவரை கார்னர் செய்தனர். எனவே, அலுவலக நண்பரை விட்டு தனியாக பிரிய முடிவெடுத்துள்ளேன். ஆசையா, நிம்மதியா என்றால் நான் நிம்மதியைத் தான் தேர்ந்தெடுப்பேன்.  நன்றி! அன்பரசு  --------------------------------------------------- 11.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  எங்கள் நாளிதழ் ஜனவரி தொடங்குவதாக கூறியிருக்கிறார்கள். கட்டுரைகள் எழுதி கணினியில் சேமிக்கத் தொடங்கிவிட்டேன். அலுவலகத்தில் லெஜண்ட் ஓவியரிடம் மட்டும்தான் பேசுகிறேன். கடவுளின் முகம் அவதாரங்களில் மாறி வருவதைப் போலவே சூழலுக்கு ஏற்ப அதி

இஸ்ரோ சிவனும், மத அடையாளமும் - சந்திப்போமா - கடிதங்கள்

படம்
மத அடையாளங்கள் அவசியமா? அன்புள்ள நண்பர் சபாபதிக்கு , வணக்கம் .   உங்கள் உடல்நலமும் , மனநலமும் சிறந்தோங்க வாழ்த்துக்கிறேன் . நான் தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கையோடு இருக்கிறேன் . ஆனால் மக்களின் பிரதிநிதியாக இருந்தால் , அவர்கள் முன் தோன்றும்போது மத அடையாளங்களைத் தவிர்ப்பேன் . மக்கள் நம்மை அணுக நாமே மத அடையாளங்களை சுவராக கட்டக்கூடாது . இது என்னுடைய கருத்து . இஸ்லாமியரோ , கிறிஸ்துவரோ வருகையில் காஞ்சி மகாபெரியவரின் புகைப்படத்துடன் அனைத்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் இருந்தால் அது சங்கடமான சூழலை உருவாக்கும் என்றே நான் நினைக்கிறேன் . குறிப்பிட்ட இன மக்களின் மீதான தாக்குதல் சூழல் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற அடையாளங்கள் மக்களை இன்னும் தனிமைப்படுத்தும் . அறிவியல் துறையில் இதுபோன்ற விஷயங்கள் புகுந்துவிட்டன . நான் தங்களிடம் போனில் இதுபற்றி பேசினேன் . அது பெரிய விஷயமில்லை என்றீர்கள் . எனக்குப் அப்படிப்படவில்லை . இஸ்ரோ சிவன் மக்கள் வரிப்பணத்தில் ஆராய்ச்சியைச் செய்யும்போது மாதிரிகளை கடவுளின் பாதங்களில் வைத்து சரணடைவது சரியானதல்ல . சேட்டன் பகத்தின் இந்தியா பாச

தேர்வால் சோகத்திற்குள்ளாகும் மாணவர்கள்!

படம்
தேர்வு வரும் காலங்களில் மாணவர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு உட்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 72 நகரங்களில் செய்த ஆய்வில் 82 சதவீத மாணவர்கள் கடுமையான சோர்வையும் அழுத்தத்தையும் உணர்வதாக கூறியிருக்கிறார்கள். ஃபோர்டிஸ் மனநல திட்டம் சார்பில் பல்வேறு தன்னார்வலர்கள் இந்திய மாநிலங்களில் இதுபற்றி சோதனைகளை நடத்தினர். இதில் 25 சதவீதப் பேர் கடுமையான பதற்றத்தை தேர்வுக்காலங்களில் மனதளவில் சந்திக்கின்றனர். இவர்களில் அதிகளவு பதற்றத்தை சந்திப்பவர்களுக்கு ஐந்து எனும் ரேட்டிங்கை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். இதில் 13 சதவீத மாணவர்கள் மட்டும் குறைந்தளவு பதற்றம் கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளனர்.  “நாம் மாணவர்களுக்கு தேர்வு கால பதற்றம் பற்றி குறைவாகவே விவாதித்துள்ளோம். ஆனால் இந்த ஆய்வில் குறைந்தளவேனும் தேர்வு பற்றிய பதற்றத்தை மாணவர்கள் உணருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது” என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான மருத்துவர் சஞ்சய் பாரிக். மாணவர்களிடம் நெருங்கிப் பேசினால்தானே அவர்களின் மன அழுத்தம் வெளியே தெரியவரும். இதற்காக 24 பேர் கொண்ட தன்னார்வக்குழுவை பயிற்சி கொடுத்து உருவாக்கி உள்ளனர். இதனால் மாணவர

மனநல பிரச்னைகளை சினிமாவில் சரியாக காட்டுவதில்லை! - ஷகீன் பட்

படம்
மன அழுத்தம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றை இன்று அனைவரும் பேசி வருகிறோம். காரணம், பணி, குடும்பம் என பல்வேறு விஷயங்கள் இடியாப்பம் போல ஒன்றாக கலந்து நம் மனதைப் பாதிக்கின்றன.   திரைப்பட எழுத்தாளர் ஷகீன் பட் இதுபற்றிய ஐ ஹேவ் நெவர் பீன் அன் ஹேப்பியர் என்ற நூலை எழுதியுள்ளார். தன் இருபது ஆண்டு, மனச்சோர்வு விடுதலைப்போராட்டம் பற்றிய நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். நீங்கள் எழுதியுள்ள நூலில் மனச்சோர்வு எப்படி உறவுகளை பாதித்தது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் இதனை எப்படி எதிர்கொண்டார்கள்.? என் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு பிரச்னை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் நூல் வெளியானபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் அறையில் இருக்கும்போது, தனியாக இருக்க விரும்ப அதிகம் விரும்பியிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமானவரிடம் கூட சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இதனால்தான் நான் பிறருக்கு சொல்லவேண்டிய விஷயங்களை நூலாக்கியுள்ளேன். இதனை படிக்கும்போது குழந்தை வளர்ப்பை ஆண்களும் செய்யவேண்டும், மனச்சோர்வு காலகட்டம், பாதிப்பு ஆக

ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!

படம்
முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி. தோல் நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது. க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது. பருப்புகளைத் தின்னுங்கள் கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்ப

உலகிலேயே ஆபத்தான மன அழுத்தம் தரும் வேலைகள் இவைதான்

மன அழுத்தம் தரும் வேலைகள் அனைத்து வேலைகளும் இன்று மன அழுத்தம் உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் தொழில் வளர்ச்சியை பகடி செய்திருப்பார். அதுபோலவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. பணியாளர்கள் வேலை பற்றிய உறுதியின்மையை சட்டங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு இரவிலும் பணியாற்றலாம் என்று தொழிலதிபர்களுக்கு பேராசை ஏற்படுத்துகிறது. பென்சன் போன்ற வசதிகளையும், அரசின் பொறுப்பையும் மறுத்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பதற்றம் கூடி இதயத்தின் லப்டப் அடுத்த சீட் நண்பருக்கும் கேட்குமளவு பிரச்னை ஆகிறது. கேரியர்காஸ்ட் வலைத்தளம் மன அழுத்தம் தரும் வேலைகளை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில வேலைகளைப் பார்ப்போம். விமான பைலட் உயரமான இடத்தில் வேலை என்றாலும், இயந்திரத்தில் ஒரு நட், போல்டு கழன்றாலும் சாம்பல் கூட கிடைக்காது. ஆனாலும் சம்பளம் ரிஸ்குக்கு ஏற்றபடி ஜாஸ்தியாக தருகிறார்கள். ஒரு லட்சம் டாலர்கள் சம்பளம் தருகிறார்கள். ஹேர் ஸ்டைலிஸ்ட் ஊர்நாட்டில் அம்பட்டன், பண்டிதர் என்பார்கள். விதம் விதம