ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!




kristen wiig flirting GIF







முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி.

தோல்

நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது.

க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது.


பருப்புகளைத் தின்னுங்கள்

கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்போது கலிபோர்னியா பாதாம் சாப்பிடுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். எனவே நீங்கள் ப்ரௌன் ட்ரீ போன் முந்திரி, திராட்சை விற்கும் கடைகளை நாடிச்சென்று அவற்றை வாங்கிச் சாப்பிடலாம். இவை லேஸ் போன்ற குப்பை உணவுகளுக்கு சிறந்த மாற்று.

உணவு எதாகிலும் அதனை தொண்டை வரை தின்றால் நோய் நிச்சயம். பார்த்துக்கொள்ளுங்கள்.

மொதலாளி முக்கியம்!

என்னதான் பருப்பு, பாயசம் என தின்று குடித்தாலும் வேலை செய்யுமிடம் சரியாக இருக்கவேண்டும். இல்லையெனில் பாயசமும் விஷமாகிவிடும். சில உருப்படிகள் வாயைத் திறந்தாலே கோர்த்துவிடும் நச்சுகள் வெளியேறும். நீங்கள் ஐம்புலன்களையும் அடக்கிய போகர் சித்தர் போல நினைத்துக்கொண்டால் மட்டுமே பாலிடிக்ஸ் தாண்டி பலன்களைப் பார்க்க முடியும். எனவே, மொதலாளி என்ற பாசத்தை கிடைத்த கேப்பில் மற்றவர்களிடம் அல்ல, முதலாளியிடமே காட்ட வேண்டும். இல்லையெனில் இன்கிரிமென்டை நீங்கள் கனவில் மட்டுமே வாங்க முடியும்.

புகைப்பிடிப்பதை விட்டுவிடுங்கள்.

அதற்காக தியேட்டரில் முகேஷை காட்டி பயமுறுத்தும் காமெடியை நம்பவேண்டியதில்லை. புகைப்பிடிப்பதை நிறுத்தினால் உடல் சற்றே பருமனாகும். காரணம், உடல் தன் இயல்பான நிலைக்கு திரும்புகிறது என்று அர்த்தம். அதிகமாக கோபம் கொள்பவர்கள் விருட் விருட்டென்று சிகரெட்டை இரு கைகளிலும் மாற்றி மாற்றி குடிப்பார்கள். கோபம் எப்படி மோசமோ, அதேயளவு சிகரெட்டும் மோசம்..

கொழுப்பு தேவை


தேங்காய் எண்ணெய்யை சந்தையில் விரட்ட மேற்குலக எண்ணெய் நிறுவனங்கள் செய்த சதிதான், எண்ணெய்யில் கெட்ட கொழுப்பு இருக்கிறது என்பது. கொழுப்பு சத்து இல்லையெனில் நம்மால் எந்த வேலையும் செய்யமுடியாது. இன்று தமிழர்கள் ஆபரில் கிடைக்கும் சூரியகாந்தி எண்ணெய்யை அதுவும் அதானி கம்பெனியிடம் வாங்கி குழம்பு தாளித்து சாப்பிட்டு வருகிறார்கள். இயல்பாகவே பசு நெய்யை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். அதுபோல உணவில் நெய்யைக் கலந்து சாப்பிடலாம். பிற பீட்ஷா போன்ற உணவு வகைகளில் சற்று கவனமாக சீஸ் போன்றவற்றை சாப்பிடவேண்டும். இவற்றில் கலோரி அதிகம். நம் குடலில் நெய்ப்பு தன்மை இல்லாதபோது செரிமானச்சிக்கல்கள் ஏற்படும்.

கற்றுக்கொள்ளுங்கள்.

துறை சார்ந்த கல்விக்கு எந்த எல்லைகளும் கிடையாது. போதும்ப்பா என்று நினைத்தால் சோலி முடிந்தது. உங்களால் அதற்குப்பிறகு எதனையும் எழுதவும் முடியாது. யோசிக்கவும் முடியாது. மீ ஸ்மார்ட் டிவியை வாங்கி வைத்துவிட்டு அதையே நோக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இல்லையா ஆடியோ நூல்களை கேட்டுக்கொண்டிருக்கலாம். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என கற்பதற்கான வழிகள் மாறியுள்ளன. அதனை பின்பற்றினாலே உங்களுக்கு என்ன தேவை என்று தெரிந்துவிடும்.

ஓய்வு எடுங்கள்

பத்திரிகைக்காரனுக்கு ஓய்வு கிடையாது. ஆனால் பிறர் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை ஓய்வு நேரத்தில் தாராளமாக செய்யலாம். எந்த பிரச்னையுமில்லை. கிடைக்கும் வீக் எண்டில் எங்காவது புதிய இடத்திற்கு செல்லுங்கள். ஏதாவது இசைக்கருவி கற்கத் தொடங்குங்கள். வேலை நேரத்தில் அந்த வேலை எப்படி ஸ்மார்ட்டாக செய்வது என திட்டமிட்டு செய்யுங்கள். அந்த நினைவை அங்கேயே விட்டுவிட்டு, ஆறுமணிக்குப் பிறகு வீட்டுக்கு செல்லுங்கள். வீட்டை சுத்தப்படுத்துங்கள். செல்ல நாயைக் கொஞ்சுங்கள். மனைவியை அணைத்துக்கொள்ளுங்கள். காதலி இருந்தால் சந்திக்க நேரம் குறியுங்கள். படிக்க நினைத்த நூலை கிண்டிலில் படியுங்கள்.

என்ஜாய் பண்ணுங்கள். அப்புறம்தான் உலகம் உங்களை படவா -  Bad Ass என்று செல்லமாக சொல்லத் தொடங்கும்.

நன்றி - டைம்









பிரபலமான இடுகைகள்