மன அழுத்தம் போக்கும் மருந்துகளை மக்கள் நம்புவதில்லை. காரணம் என்ன?
மிஸ்டர் ரோனி
மன அழுத்தம் போக்கும் மருந்துகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஏன்?
இன்று மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. வான்டட் ஆங்கிலப் படத்தில் மெக்அவி அடிக்கடி மன அழுத்தப் பிரச்னைக்காக மாத்திரைகள் சாப்பிடுவார். அது இயல்பானதாக இன்று மாறியுள்ளது. காரணம் உணர்ச்சிகளை நாம் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத இயலாமை உள்ளது. இவை இரவில் நம் மனதில் குத்தல் கொடுக்க, மூளையில் கனவுகள் உருவாகின்றன.
பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது செரடோனின் சுரப்பைக் குறைக்கும் புரோஸாக், சிட்டலோபிராம் ஆகிய மாத்திரைகளைத்தான். மன அழுத்தம் உங்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் மருந்துகளின் டோஸ்களை முடிவு செய்வார். எனவே அவசரப்படாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது மூளையை அமைதிப்படுத்தி பதற்றம் குறைக்கும். சாதாரணமாக ஒருவரோடு உட்கார்ந்து பேசினாலே மனம் லேசாகும். இதைத்தான் உளவியல் மருத்துவரும் செய்கிறார்.
நன்றி - பிபிசி