விடுதலை ஆனால் சிறுமிகளை மீண்டும் கொல்வேன் - பெட்ரோ லோபெஸ்
அசுரகுலம்
பெட்ரோ லோபெஸ்
2
பாதிரியார் போலீஸ் ஆள் என்று தெரியாமல் குற்றங்களை ஒப்பித்துவிட்டார் லோபெஸ். இதனால் போலீஸ் இப்போது சொல், உன் குற்றங்களை என்றபோது விராட் கோலியின் ரன் ரெக்கார்டுகளை தந்தி எழுதுவது போல அத்தனையும் வந்து விழுந்தன. ஈகுவடாரில் நூறு, பெருவில் நூறு, கொலம்பியால் நூறுக்கும் அதிகம் என சிறுமிகளை பதம் பார்த்து வைகுண்டம் சேர்த்திருந்தார் லோபெஸ்.
எப்படி சிறுமிகளை பிடிக்கிறார்?
தெருவில் நோட்டம் விடுவதற்காக செல்வது அவரின் வழக்கம். கேண்டி மேன் தருகிறேன், ஹால்திராம் சோன் பப்டி தருகிறேன் என்று சொல்லி சிறுமிகளை கூட்டி வந்து பேசிக்கொண்டிருப்பார். இனிமையாக பேசுவது எல்லாம் இரவு மட்டும்தான். சூரியன் உதயமாகும்போது, சிறுமியை வல்லுறவு செய்து, கழுத்தை நெரித்து கொல்வார் லோபெஸ். இதில் உயிருக்குப் போராடி ஆன்மா கண்களின் வழியாக பிரிவதைப் பார்ப்பது லோபெசுக்கு மிகவும் பிடிக்கும்.
அதோடு சிறுமிகளின் சடலங்களை போட்டு வைக்க, குகை ஒன்றைத் தோண்டியிருந்தார். வல்லுறவு செய்து சிறுமிகளை கொன்றபிறகு டைம்பாசுக்கு என்ன செய்வது? அதற்குத்தான் பிணங்கள் இருக்கிறதே? அழுகும் பிணங்களோடு பேசிக்கொண்டிருப்பார் லோபெஸ். அதிலும் சலிப்பு ஏற்பட்டபின்பு, அடுத்த சிறுமியை பிடிக்க தெருவில் இறங்கி விடுவார்.
நூறு குழந்தைகளை குகையில் தோண்டி எடுத்த போலீசார் அதை வைத்தே லோபெஸ் மீது வழக்கு தொடுத்தனர். அவரும் அதை ஏற்றார். இதனால் ஆயுள்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.சிறையில் அவரை ரோன் லெய்ட்னர் என்ற பத்திரிகையாளர் கட்டுரைக்காக சந்தித்து பேசினார். அப்போது சிறையிலிருந்து உங்களுக்கு விடுதலை கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். நான் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மீண்டும் சிறுமிகளைத் தேடிப் பிடிப்பேன் என்றார் லோபெஸ். கொல்லுவதுதான் அவருக்கு மகிழ்ச்சி தருகிறது என்று உலகம் அப்போதுதான் அறிந்துகொண்டது. ஆண்டிஸ் கொலைகாரர் என கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு அமெரிக்க பத்திரிகைகள் அலறின.
இருபது ஆண்டுகள் கழித்து லோபெஸை ஈகுவடார் அரசு விடுதலை செய்தது. அவரை பெரு, கொலம்பியா எல்லையில் கொண்டுபோய் விட்டுவிட்டனர். அதற்குப்பிறகு அவர் என்ன செய்தார் என்ற செய்திகள் எங்குமில்லை.
அவரின் விருப்பப்படி அவர் கொலைகளை தொடங்கினாரா அல்லது அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை கொன்று போட்டார்களா என்றும் தெரியவில்லை.
தொகுப்பு - வின்சென்ட் காபோ
நன்றி - தாட்.கோ