சிறிய நாய்களுக்கு ஆக்ரோஷம் ஏற்படுவது ஏன்?
மிஸ்டர் ரோனி
பெரிய நாய்களை விட சிறிய நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஏன்?
அக்கறைதான். நாய்களும் ஓர் உயிர் என்று நினைத்தால் பரவாயில்லை. அதனை ஒரு பொருளாக, தொந்தரவாக உரிமையாளர்கள் நினைத்தால் அதனை நாய்கள் உடனே உணர்ந்துகொள்ளும். இதனால்தான் கவனத்தை ஏற்படுத்த சைக்கிளில் வருபவரை கடிக்கப்போவது, வீட்டுக்கார ஆட்களை பிறர் தொட்டால் கூட மேலே விழுந்து பிறாண்டுவது, எப்போதும் ஷோல்டரை தூக்கிக்கொண்டு சண்டைக்கோழி விஷால் மாதிரியே திரிவது என இருக்கும். இதற்கு மரபணு ஒரு காரணம் என்றாலும், நாய்களின் குணம் இப்படி மாற்றுவழியில் போனால் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த பேண்ட் எய்ட் உங்களுக்குத்தான்.
நன்றி - பிபிசி