தாய்மொழியில் அறிவியலை ஊக்குவிக்கும் அமைப்புகள்!
pixabay |
தாய்மொழியில் அறிவியல் கற்கலாம்!
இந்தியாவிலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழிகளில் அறிவியல் தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆங்கில மொழி அறிந்தவர்கள் எளிமையாக உலகில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியும். ஆனால் அம்மொழியை அறியாதவர்களுக்கு அது கடினம். அறிவியல் விஷயங்களை, ஆங்கிலத்தில் கற்பதை விட தாய்மொழி வழியாக கற்பது இன்னும் எளிதாக இருக்குமே! இந்த எண்ணத்தில்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து அறிவியல் தகவல்களை உள்ளூர் மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இத்தகவல்கள் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கானவை.
இம்முறையில் மன்றம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றும் அறிவியல் வல்லுநர்கள், அறிவியல் தொடர்பான செய்திகளை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழி சார்ந்த தன்னார்வலர்கள் அறிவியல் செய்திகளை தொழில்நுட்பம் சார்ந்த பகிர்ந்து வருகின்றனர். அறிவியல் செய்திகளை நீங்கள் வீடியோவாக பார்க்கவேண்டும் என்பதில்லை. ஒலிக்கோப்பாக கேட்டால் கூட போதுமே? இம்முறையிலும் சீ ஆஃப் சயின்ஸ் (Sea of Science) என்ற பெயரில் அமைந்த வலையொலி ் ஒலிபரப்பு, ஐந்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகளில் அறிவியல் செய்திகளை வழங்குகிறது.
யூடியூப், வாட்ஸ்அப், வலையொலி (podcast) என பல்வேறு வடிவங்களில் மொழித்தடைகளை உடைத்து, உள்ளூர் மொழிகளில் தன்னார்வலர்கள், அறிவியல் செய்திகளை வழங்கி வருகிறார்கள். ஆங்கிலத்தில் அறிவியல் செய்திகள் உள்ளது என்ற மனத்தடையை அகற்றும் நோக்கில் தன்னார்வலர்கள் செயற்பட்டு சாதித்து வருகின்றனர். ”ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கொண்ட இந்தியர்கள் அதில் யோசித்து கண்டுபிடிப்புகளை செய்வது கடினம். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் முன்னேற்றத்துக்கு காரணம், அவர்கள் தாய்மொழியில் அறிவியலைக் கற்றதுதான்.இதன் பொருள், ஆங்கிலத்தை புறக்கணிப்பது அல்ல. அறிவியலை ஆழமாக கற்பதே ” என அழுத்தமாக பேசுகிறார் முதன்மை அறிவியல் ஆலோசகரான கே. விஜய்ராகவன். இதை வழிமொழிகிறார் பெங்களூரு வாழ்க்கை அறிவியல் கழகத்தின் (BLiSC) தகவல் தொடர்பாளரான மகின் அலி கான்.
“பல லட்சம் இந்தியர்களுக்கு ஆங்கில மொழி அறிவு இல்லை. இதன் காரணமாக அவர்கள் அறிவியல் விழிப்புணர்வை இழந்துவிடக்கூடாது ” என்கிறார். இந்த அமைப்பு, சிறுவர்களுக்கு அறிவியல் கல்வியைக் கற்றுத்தர சயின்ஸ் கஃபே எனும் நிகழ்ச்சியை பொது இடங்களில் நடத்துகிறது.
தகவல்:ET
வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்