இடுகைகள்

ராம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுமிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ராணுவ வீரனின் கதை! - சீதாராமம்- ஹனு ராகவப்புடி

படம்
  சீதாராமம் - தமிழ்  துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா, தருண் பாஸ்கர்  இயக்குநர் ஹனுமந்த் ராகவப்புடி இசை - விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு - பிஎஸ் வினோத் தேசப்பற்று ஊற்றியெழுதிய காதல் கதை.  இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறார்கள். தேசப்பற்று என்பதோடு மனிதநேயம் என்பது எல்லைகளைக் கடந்தது. அதை நாம் இரும்புவேலிகளால் அடைக்க முடியாது என்பதையும், பலரின் தியாகங்களால்தான் நமக்கு உயிர்வாழும் வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது.  இதை தொடர்புடையவர்களே மறந்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.  கதை 1964 - 1985 என்ற காலகட்டத்திற்குள் நடைபெறுகிறது. அஃப்ரின் என்ற பெண்ணுக்கு அவரது தாத்தாவின் சார்பாக ஒரு கடிதம் கிடைக்கிறது. அதை அவள் கொண்டுபோய் சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு தாத்தாவின் சொத்து கிடைக்கும். அதை அவள் தான் மன்னிப்பு கேட்காமல் இருக்க பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்காகவும் மன்னிப்புக் கேட்க கூடாது. தான் செய்வதெல்லாம் சரி என நினைப்பு கொண்டவள் அஃப்ரின்.  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்திய அதிகாரி ஒருவரின் கார

மக்களின் உணர்ச்சி தான் எனக்கு முக்கியம்! - ராஜமௌலி, தெலுங்கு சினிமா இயக்குநர்

படம்
  ராஜமௌலி தெலுங்கு சினிமா இயக்குநர் கருத்தியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு ஆதரவாக படமெடுப்பவர். காட்சிரீதியாக பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தருபவர். பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தெரிய வந்தவர். அதற்குமுன்னர் தெலுங்கில் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, எமதொங்கா, விக்ரமார்குடு, சத்ரபதி என அனைத்து படங்களிலும் ஏதாவதொரு புது விஷயத்தை முயற்சி செய்திருப்பதை பார்த்தாலே அறியலாம்.  நீங்கள் தெலுங்கு மொழியில் படம் எடுக்கிறீர்கள். ஆனால் அதை இந்தி மக்கள் வரவேற்கிறார்களே? நான் இந்தி, தெலுங்கு என எதையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காட்சிரீதியாக தான் நான் கதை சொல்லுகிறேன். மொழி ரீதியாக அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்கானது தான். அதை நடிகர்கள் பேசுகிறார்கள். எனது படங்களில் பெரும்பகுதி தகவல் தொடர்பு காட்சி ரீதியாகவே நடைபெறுகிறது. மொழியை நான் தடையாக நினைக்கவில்லை.  தென்னிந்தியப் படங்கள் இந்தி திரையுலகில் வெற்றி பெற காரணம், அவர்கள் சரியான முறையில் படங்களை எடுக்காததே காரணம். வெற்றிக்கான காரணம் என நம்மை நாமே கூறிக்கொள்ள முடியாது. 90களில் இந்தி திரையுலகம் அற்புதமாக கதை சொல்லும் ஏராளமா

டபுள் சிம்கார்ட் மூளையில் - இஸ்மார்ட் ஷங்கர் -சரவெடி

படம்
இஸ்மார்ட் சங்கர் - தெலுங்கு இயக்கம் - பூரி ஜெகன்னாத் ஒளிப்பதிவு - ராஜ் தோட்டா இசை - மணிசர்மா ஆந்திராவில் கூலிக்கு கொலை செய்யும சங்கரின் நினைவுகள் அழிக்கப்பட்டு, போலீஸ் அதிகாரியின் நினைவுகள் மூளையில் பதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் கார சார விளைவுகள்தான் கதை. ஆஹா... ராம்தான். எந்த படத்தில் நடித்தாலும் எனர்ஜெட்டிக்காக நடனம் ஆடி அசத்துபவர் இதில் நடிப்பிலும் அசத்திவிட்டார். இந்தியும், தெலுங்குமாக படம் முழுக்க பேசும் மொழி அபாரம். அதிலும் ஆபரேஷன் செய்த பின் அங்கு நடக்கும் கலாட்டாக்களில் பின்னி எடுத்திருக்கிறார். அதையொட்டி வருவதுதான் திம்மாக் கராப். இசையில் விசிலடிக்க வைத்திருக்கிறார் மணிசர்மா. நாபா நடேஷ் வரும் காதல் காட்சிகள்தான் கொஞ்சம் உயிரோட்டமாக குறும்பாக இருக்கிறது. அய்யய்யோ.... சத்யதேவ்.. இவர் எதற்கு இந்தப் படத்திற்கு என்று தெரியவில்லை. படத்தில் பாதி நேரம் வண்டி ஓட்டுகிறார். இவர் காரணமாக படத்தின் இரண்டாம் பாகம் ஓடுகிறது. அப்புறம் டால்டா வில்லன்களை எதற்குப் போட்டார்கள் என்று தெரியவில்லை. நம் கண்களுக்குத் தெரிவது நான்கு வெள்ளைச்சட்டை, ப்ளூ ஜீன்ஸ் அணி