டபுள் சிம்கார்ட் மூளையில் - இஸ்மார்ட் ஷங்கர் -சரவெடி
இஸ்மார்ட் சங்கர் - தெலுங்கு
இயக்கம் - பூரி ஜெகன்னாத்
ஒளிப்பதிவு - ராஜ் தோட்டா
இசை - மணிசர்மா
ஆந்திராவில் கூலிக்கு கொலை செய்யும சங்கரின் நினைவுகள் அழிக்கப்பட்டு, போலீஸ் அதிகாரியின் நினைவுகள் மூளையில் பதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் கார சார விளைவுகள்தான் கதை.
ராம்தான். எந்த படத்தில் நடித்தாலும் எனர்ஜெட்டிக்காக நடனம் ஆடி அசத்துபவர் இதில் நடிப்பிலும் அசத்திவிட்டார். இந்தியும், தெலுங்குமாக படம் முழுக்க பேசும் மொழி அபாரம். அதிலும் ஆபரேஷன் செய்த பின் அங்கு நடக்கும் கலாட்டாக்களில் பின்னி எடுத்திருக்கிறார். அதையொட்டி வருவதுதான் திம்மாக் கராப். இசையில் விசிலடிக்க வைத்திருக்கிறார் மணிசர்மா. நாபா நடேஷ் வரும் காதல் காட்சிகள்தான் கொஞ்சம் உயிரோட்டமாக குறும்பாக இருக்கிறது.
அய்யய்யோ....
சத்யதேவ்.. இவர் எதற்கு இந்தப் படத்திற்கு என்று தெரியவில்லை. படத்தில் பாதி நேரம் வண்டி ஓட்டுகிறார். இவர் காரணமாக படத்தின் இரண்டாம் பாகம் ஓடுகிறது. அப்புறம் டால்டா வில்லன்களை எதற்குப் போட்டார்கள் என்று தெரியவில்லை. நம் கண்களுக்குத் தெரிவது நான்கு வெள்ளைச்சட்டை, ப்ளூ ஜீன்ஸ் அணிந்து ஆட்கள் ஓடுவதுதான். அவர்களை என்ன சொல்கிறார்கள்? சிபிஐ என்று.
சாரா என்ற விஞ்ஞானி காதலி கேரக்டர்.... அவ்வளவு வலுவாக கதைக்குப் பயன்படவில்லை. திம்மாக் கராப் பாடலுக்கு நாபா நடேஷ், நிதி அகர்வாலின் அழகை தரிசித்து மகிழலாம். இறுதியில் சிவ நடனம் வேறு எரிச்சலூட்டுகிறது. சட்டுபுட்டுன்னு கொல்லுய்யா... நாங்க வீட்டுக்கு போறோம்னு சொல்லும் வரையில் ராம் தன் உடலை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறார். ஆம். ஜிம்மில் எக்சர்சைஸ் செய்த பாடிதான். அதற்காக எவ்வளவு நேரம்?
ஒருவரின் மூளைக்கு மற்றொருவரின் நினைவுகளைக் கடத்துவதுதான் கதை. இதனால் இன்னொருவரின் முழு திறன்களும் இன்னொருவருக்கு வராது. அவரை எப்படி சிபிஐ தன் குழுவில் ஏற்றுக்கொள்ளும்?
காதலர் என்றால் பெண்ணுக்கு அவரின் சிந்தனை, பேச்சு, தத்துவம் எல்லாம் நினைவுக்கு வராது . உருவம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சாரா எப்படி உடனே சங்கரை அவன் இல்லைன்னா இவன் என டிக் அடித்து ஏற்கிறார். ஆச்சரியம்.....
இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நிதி அகர்வாலின் பீச் சாங் நாம் பார்க்காமலேயே போய்விடலாம். எனவே டீப்பா யோசிச்சிங்.. ஒன்லி என்ஜாயிங் ப்ரோ. கரம் மசாலா டீ..
கோமாளிமேடை டீம்