புதிய இசை பிடிக்காமல் போகும் வயது எது? - உளவியல் ஆராய்ச்சி
மிஸ்டர் ரோனி
முப்பது வயதுக்கு மேல் புதிய இசை பிடிக்காமல் போவது ஏன்?
நல்ல கேள்வி. எங்கள் அலுவலகத்தில் கூட 53 வயதான சீனியர் ரஹ்மானையும் அனிருத்தையும் திட்டி ராஜ விசுவாசத்தை நிரூபித்து வருகிறார். இதற்கு காரணம், மூளையில் இருக்கிறது. இயல்பாகவே நாம் திருவிழா, சாவு, மயானக் கொள்ளை என பல்வேறு இடங்களிலும் இரண்டு சாமி பாட்டுகளைப் போட்டு பின்னர் அதிரடியாக சினிமா பாட்டுகளுக்கு இறங்கி வந்துவிடுவோம். இதனால் நம் 13 -14 வயதில் குறிப்பிட்ட இசை வகைக்கு செட் ஆகிவிடுவோம். இருபது வயதில் ரஹ்மான்தான்டா லெஜண்டு, ஜிப்ரான்லாம் அவரோட கால் தூசுக்கு சமம்டா என சண்டை இழுக்கும் அளவுக்கு தரை லோக்கலாக மாறிவிடும்.
இயல்பாகவே இருபதுகளில் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அதனால் யூட்யூப்பில் வைரலாகும் அனைத்தையும் நாம் கேட்போம். நண்பர்கள் ஹேங்அவுட்டில் கிடைக்கும் நண்பர்களின் பரிந்துரைகளையும் லிங்குகளையும் ஏற்று ரசிப்போம். ஆனால் 30 வயது ஆகும்போது அனைத்தும் மாறிவிடும். அதற்குப் பிறகு, வேலை, குடும்பம் என நச்சு வேலைகள் மூளையெங்கும் நிறைந்துவிடும். அதற்குப் பிறகு நாம் நினைத்தாலும் புதிய விஷயங்களுக்குச் செல்ல முடியாது. பழைய ராசய்யா பாடல்களைக் கேட்டு இதுபோல வருமா என கேட்டுக்கொண்டிருப்போம். என்ன செய்ய முடியும் வாழ்க்கை அப்படித்தானே?
நன்றி - க்யூரியாசிட்டி