அசாமும் நம்மில் ஒரு பகுதிதான்- இனவெறி வேண்டாம் - சேட்டன் பகத்!
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஆவணங்களை பதிவு செய்ய கந்துவட்டிக்கு கடன் வாங்கி அசாமியர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். டெல்லி முதன்முறையாக கிழக்கிந்தியர்களை இப்படி செய்கிறது என நினைக்க முடியவில்லை.
அசாமில் தீவிரவாதிகளின் போராட்டம், கலவரம், நிடோ டானியா என்ற இளைஞரின் கொலை போன்ற விஷயங்கள் நம்மை நாமே வெறுக்க வைப்பன. கிழந்திந்தியாவின் வாசலான அசாமில் உள்ள மக்களை வெறுப்பது இந்தியாவில் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
அங்குள்ளவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பொருளாதார மண்டலம் அமைத்து உருவாக்கலாம். பல்வேறு இசை, கலாசார நிகழ்வுகளை அங்கு நடத்தலாம். இந்திய எல்லையை ஒட்டி உள்ள மக்கள் என்பதால் எளிதாக அவர்கள் சீனாவின் பக்கம் சாய வாய்ப்புள்ளது.
இந்திய அரசு தன்னுடைய மக்களாக அசாமியர்களைப் பார்ப்பது பன்மைத்துவத்திற்கு நல்லது. இனிமேலும் அசாம் மக்கள் நாம் பாகுபாட்டுடன் கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் இந்திய மக்களாக இருப்பது கஷ்டம். விரைவில் இதனை இதை இந்திய அரசு உணரும் வாய்ப்பு வரும்.
அசாமியர்களை தங்களுடன் தக்கவைத்துக்கொள்ள இந்தியா, தாய்மொழி, மண் என பிராந்திய அரசியலை கையகப்படுத்த முயற்சிக்கிறது. இது தற்காலிக பயன்களை ஆளும் கட்சியான பாஜகவிற்கு அளிக்குமே தவிர நிரந்தரமான சிக்கலை அங்குள்ள மக்களுக்குத் தரும்.
மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் குடிமக்கள் பதிவேடு போன்ற பிரச்னையான விவகாரங்களை அரசு கவனமுடன் கையாள வேண்டும். வெளிமாநில மக்களுக்கான முகாம்களை மத்திய அரசு அங்கு கட்டி வருகிறது. பட்டியலில் இடம்பெறாத மக்கள் அங்கு குடியேறுவார்கள் என்று தெரியாது. பின்னாளில் இது யூத வதைமுகாம் அல்லது இலங்கை அகதிகள் முகாம் போல் அமையுமா என்றும் புரியவில்லை.
நாம் அனைவருமே எங்கிருந்தே இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான். பிறப்பு, மொழி, சாதி என பாகுபாடாக நடந்துகொள்வது நிச்சயம் தொழில், சமூக, வளர்ச்சிக்கு உதவாது. இந்தியாவும் அதற்குப் பின்னர் குடியரசாக இருக்காது.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.