இந்தியப் படங்களுக்கு ரஷ்யாவில் மவுசு ஜாஸ்தி! - ஆலெக் அவ்தீவ்





Image result for oleg n avdeev"



நேர்காணல்

ஆலெக் என் அவ்தீவ், ரஷ்ய ஃபெடரேஷன் தலைவர்


சென்னையிலுள்ள ரஷ்யத் தூதரகம் தன் செயற்பாடுகளாக என்னென்ன விஷயங்களைச் செய்துவருகிறது?

இந்தியாவும் ரஷ்யாவும் பல்லாண்டுகளாக நெருக்கமான தொடர்புகளிலுள்ள நாடுகள். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய விஷயங்களிலும் நாங்கள் இந்தியாவுடன் ஒத்திசைவாக உள்ளோம்.

கலாசாரத்தின் பக்கம் வருவோம். நாங்கள் 1980களில் படித்த பல்வேறு நூல்கள் ரஷ்ய அரசால் மாஸ்கோவில் அச்சிடப்பட்டது. எப்படி இதனைச் செய்தீர்கள்?


முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் ராதுகா பதிப்பக நூல்களைக் குறிப்பிடுகிறீர்கள். உண்மைதான் அப்பதிப்பகங்கள் இன்று இல்லை என்றாலும் அன்று நிறைய நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொண்டு வந்தனர். இன்றும் மொழிபெயர்ப்பதற்கான ஏராளமான இலக்கியச் செல்வம் ரஷ்யாவில் உள்ளது. உள்நாட்டிலும் அவை விலை குறைவாக கிடைக்க காரணம், இன்றும் அரசு அவற்றுக்கு நிதியுதவி அளித்து வருவதுதான்.

நாங்கள் உயர்கல்வியில் படித்த லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செகாவ், மிகாய்ல் சொலோவ்கோவ் ஆகியோரின் நாவல்களில் காட்டிய கலாசாரம் இன்று ரஷ்யாவில் இல்லை அப்படித்தானே?

கருத்தியல் என்பது காலம் தோறும் மாறக்கூடியது. உண்மையில் மனிதநேயம் பேசும் இலக்கிய நூல்கள் எக்காலத்திலும் உலகில் உயிரோடு வாழும். சொலகோவ், நோபல் பரிசு வென்ற இலக்கியவாதி. மேற்கு நாடுகளிலும் கூட அவரின் நாவல்கள் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. அவரின் உலகம் நாம் பார்ப்பதை விட பெரியது, தாராளமானது.

இந்தியப் படங்கள் ரஷ்யாவில் புகழ்பெற்றிருக்கின்றனவா? ஏனெனில் 1960களில் ராஜ் கபூர் மாஸ்கோ வந்தாரல்லவா?

எனக்கு தனிப்பட்ட ரீதியில் மிதுன் சக்ரவர்த்தியைப் பிடிக்கும். என்ன காரணம் என்கிறீர்களா? படங்கள் மட்டுமன்றி டிவியில் அவர் நடித்து வந்தார். இந்திப் படங்கள் ரஷ்யாவில் பெரும் புகழ்பெற்றிருந்தன. படங்களின் காட்சிகள், பாடல்களுக்கு இங்கு கைத்தட்டல்கள் அதிகம் கிடைத்தன.


கலாசார ரீதியாக நீங்கள் உங்களின் நோக்கத்தைக் கூறுங்கள். 

இருநாடுகளுக்குமான பொதுவான கலாசார பாலத்தை அமைக்க முயற்சிக்கிறோம். இந்தியப் பாடல்களுக்கு ரஷ்யாவில் பெரும் மதிப்பு உண்டு. அதைப்போலவே ரஷ்யாவில் இசை நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்கள் அதிகம். நாங்கள் எங்கள் தூதரகத்திலுள்ள அரங்கில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை ஒத்திசைவாக இருக்க வைக்கிறோம். மேலும் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆன்மிக ரீதியாகவும் தொழில்ரீதியாகவும் வலுவான கூட்டாளிகளாக முன்னரும் தற்போதும் உள்ளனர்.

நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்