பேச்சுலர் பார்ட்டி ரகசியங்கள்! - தெரிஞ்சுக்கோ டேட்டா!



tom hanks GIF
giphy.com





தெரிஞ்சுக்கோ!

வண்டி வாங்கினாலும் சரி, ஃபேப் இந்தியாவில் காட்டன் குர்தா வாங்கினாலும் சரி ட்ரீட் வெச்சே ஆகணும் என அடம்பிடிக்கிறார்கள் மில்லினிய அன்பர்கள். அப்புறம் வேற வழி? இன்று குறிப்பிட்ட தின கொண்டாட்டங்களை விட வலிய உருவாக்கும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் ஹேங் ஓவர் சினிமாக்களிலேயே வந்துவிட்டது. உடனே இந்தியாவுக்கு டவுன்லோடு செய்யும் பழக்கம் உருவாகி வருகிறது. அதுபற்றிய ஜாலி டேட்டா!


கடந்த ஆண்டில் மட்டும் பேச்சுலர் பார்ட்டிக்கு செலவான தோராய தொகை 1400 டாலர்கள்.

இங்கிலாந்தில் பேச்சுலர் பார்ட்டி சந்தை மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது.

ஒருவருக்கு இந்த பார்ட்டியில் ஆகும் செலவு 471 பவுண்டுகள் ஆகும். குறைந்தது இப்பார்ட்டியில் பத்து பேர் கலந்துகொள்கிறார்கள்.

மூன்று நாள் பேச்சுலர் பார்ட்டியில் தோராயமாக 5 காக்டெய்ல் பானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


உலகளவில் கல்யாண சந்தை மதிப்பு 300 பில்லியன் டாலர்களாக உள்ளது.

நன்றி- க்வார்ட்ஸ்