நோபல் பரிசு பிட்ஸ்!

Image result for nobel


1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி ஆல்ஃபிரட் நோபல், அறிவியல் துறைகளுக்கான நோபல் பரிசை உருவாக்கினார். பின்னர், 1968 ஆம் ஆண்டு ஸ்வீடன் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கான தனி பரிசை உருவாக்கியது.

1901-2018 காலகட்டத்தில் மட்டும் பல்வேறு அறிவியல் துறைகளுக்கு 590 முறைகள் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் பரிசு அதிகபட்சமாக மூன்று நபர்களை உள்ளடக்கியது. பரிசுத்தொகை இவர்களுக்கு சம பங்காக பிரித்தளிக்கப்படும்.

தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளடங்கலாக 935 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் துறைகள் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் 52 முறை, பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு சான்றிதழை ஸ்வீடன், நார்வே ஓவியக்கலைஞர்கள் மற்றும் கலியோகிராபி கலைஞர்கள் உருவாக்குகின்றனர்.

சிறையில் இருப்பவர்களுக்கும் கூட நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி (மியான்மர்),   பத்திரிகையாளர் கார்ல் வான்  ஒசிட்ஸ்கி (ஜெர்மனி), மனித உரிமை செயற்பாட்டாளர் லியு ஜியாபோ(சீனா) ஆகியோர் இம்முறையில் நோபல் பரிசு பெற்றனர்.