டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!



Beer Diwali GIF by KingfisherWorld








நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி.

காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன.

பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள்.

அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரணமாக டாஸ்மாக் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இந்த விற்பனைக்காக நிச்சயம் கவலைப்படும். பின்னே போன ஆண்டு 480 கோடி வருமானம் பெற்ற கடை, இந்த ஆண்டு 455 கோடி வருமானம் ஈட்டினால் சங்கடம்தானே?





பிரபலமான இடுகைகள்