மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி கிளிஷேக்கள் மாறவேண்டும்! - விவேக் தெஜூஜா
நேர்காணல்
விவேக் தெஜூஜா
ஓரினச்சேர்க்கையாளர் பற்றி நிறைய சுயசரிதைகள் இன்று வருகின்றன. இதன் பிரயோஜனம் என்ன? மக்களின் சிந்தனைகளை மாற்றும் என நம்புகிறீர்களா?
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு 377 சட்டத்திருத்தம் பற்றி வந்ததும் நான் எழுதிய நூல் இது. ஆனால் இதனை பதிப்பிக்க பதிப்பாளர்களை அணுகியபோது, அவர்கள் இதில் ஆபாசமான கிராபிக் படங்கள் உள்ளன என்று கூறிவிட்டனர். நான் அடுத்த பதிப்பாளரிடம் நகர்ந்துவிட்டேன். இப்படியே நிராகரிப்புகளாக சென்று கொண்டிருந்தது . இன்று நீங்கள் கேட்டதுபோல் சொற்களைத்தான் நான் அதிகம் கேட்கிறேன். ஆனால் இன்று இவை இம்முறையில் அதிகம் பேசப்பட்டாலும், நாளை நிலைமை மாறும். சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரின் குரலும் கேட்கும். அதற்கு நூல்கள் முக்கியமான வழியாக கருதுகிறேன்.
நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். அதாவது உங்களது பாலினத் தன்மையை ஏற்காதது பற்றி... இன்று நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா?
நான் என் குடும்பத்தை விட்டு பதினெட்டு வயதில் வெளியேறினேன். அப்போது எனக்கு பிடித்த ஒன்றை மறுக்கிறார்களே என்று கடுமையான வெறுப்பும் விரக்தியும் மனதில் மேலோங்கி இருந்தது. ஆனால் இன்று மாற்றுப்பாலினத்தவர்கள் குறிப்பிட்ட பழங்குடி இனம், தனிப்பட்டவர்கள் என்று புரிந்துகொண்டேன்.
மக்களும் இன்று நிறைய மாறியிருக்கிறார்கள். தொண்ணூறுகளில் இதைப்பற்றி பேசுவதை யோசித்தே பார்க்கமுடியாது. நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கான ஆண் துணையை பிரயத்தனப்பட்டு தேடியிருக்கிறேன். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் அப்படி அவர்களும் மறுமுனையில் தேடியிருக்கலாம். அன்று சூழல் சரியாக இல்லை என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் ஓரினச்சேர்க்கை பற்றி கூறியதும் உங்கள் குடும்பத்தில் உங்களை மனநல சிகிச்சை அளிப்பவர்களிடம் குடும்பத்தினர் கூட்டிச்சென்றிருக்கிறார்கள். அதைப்பற்றி கூறுங்கள்.
அந்த வினோத சம்பவம் இனிமேல் நடக்காது. அப்போது 377 சட்டப்படி மாற்றுபாலினத்தவர் உறவு என்பது தண்டனைக்குரிய குற்றம். இன்று நிலைமை மாறியுள்ளது. எனக்கு குடும்பம் அளித்த ஆலோசனை, அறியாமையில் விளைந்த ஒன்று. இன்று இணையத்தில் இதற்கான ஆலோசனைகள் நிறைய கிடைக்கின்றன. எனவே உளவியல் சிகிச்சையும் மாற்றுப்பாலினத்தவரின் தன்மையும் வேறுவேறானவை.
நீங்கள் உங்களது நூலில் இந்திப் படங்களில் வரும் மாற்றுப்பாலினத்தவரைக் கேலிசெய்யும் கதாபாத்திரங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அவை உங்களை பாதிக்கின்றனவா?
படத்தின் எழுத்தாளர்கள் இன்னும் கிளிஷேக்களிலிருந்து வெளிவரவில்லை. அவர்கள் கூறும்படியான கதாபாத்திரங்களை நீங்கள் நிஜத்தில் பார்க்கவே முடியாது. ஆங்கிலத்தில் மேட் இன் ஹெவன் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கூட ஓரினச்சேர்க்கையாளர்தான். ஏன் இந்திய இயக்குநர்கள் காதலை மாற்றி யோசிக்க கூடாது? காலம் மாறி வருகிறது. அதற்கேற்ப திறந்த மனதுடன் கதைகளை எழுதலாமே? என் குடும்பத்திற்கு நானும் என்னைப் போன்றவர்களும் படங்களில் வருவது போல கேலிச்சித்திரங்களாகத் தோன்றலாம். ஆனால் படத்தின் எந்த கதாபாத்திரங்களோடும் நான் என்னை பொருத்திப்பார்க்கவில்லை என்பதே நிஜம்.
நன்றி: டைம்ஸ்