பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி





Image result for abhijit banerjee and esther duflo interview on toi
newzz




நேர்காணல்

அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ


சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள்.

சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது.


இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன?

இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குறிப்பிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்களை பார்த்து நமது முயற்சி சரியா, தவறா என தீர்மானித்துக் கொள்ளலாம்.


பொதுவாக உங்களைப் போல ஆய்வு செய்பவர்களை அரசியல்வாதிகள் எதிரிகளாக பாவிக்கிறார்கள். உங்களைப் போன்றோரின் ஆய்வுத்தகவல்களை தடாலடியாக நிராகரித்து விடுவது அனைத்து நாடுகளிலும் நடக்கிறதே?

நாங்கள்  செய்யும் ஆய்வு என்பது முடிவான பதில் அல்ல. பதிலைத் தேடும் பயணம். ஆரோக்கியமான விவாதம் அவ்வளவுதான். மக்கள் இதனை கவனித்தால் அவர்களுக்கு பதில் கிடைக்கும். இல்லையெனில் அவர்கள் அதற்கான சூழ்நிலைகளை சந்திக்கும்போது இதனைப் படிப்பார்கள். இதில் பெரிய வித்தியாசம் இல்லை.

எஸ்தர் - நாங்கள் எங்களது நூல்களிலுள்ள தகவல்கள் மூலம் ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்கவே விரும்புகிறோம்.


நீங்கள் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் நியாய் திட்டத்தை உருவாக்கி அளித்தீர்கள். உங்களுக்கு பாஜக அரசுடன் பணியாற்றுவதில் ஏதேனும் மனத்தடைகள் உண்டா?

நாங்கள் முன்னமே கூறியபடி எந்த அரசு எங்களை அணுகி தகவல்களைக் கேட்டாலும் நாங்கள் அதனைத் தருவோம். ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்ற அதனைச் செய்கிறோம். அவ்வளவுதான். இடது, வலது என்ற பேதம் இதில் கிடையாது.

எஸ்தர் - நாங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பணியாற்றி உள்ளோம். மேற்குவங்கம், குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கூட நாங்கள் கருத்தியல் ரீதியான மோதல்களை எதிர்கொள்ளவில்லை.

தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சாதி முக்கியத் தடையாக உள்ளதா?

பிராமணர்களின் வேலையைப் பெற யாரும் இங்கே காத்திருக்கவில்லை. அவரவர் தங்கள் திறன்களுக்கான வேலையை பெற்று வருகின்றனர். இப்போது சாதியின் தாக்கம் வேலைகளில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

சுயதொழில் வாய்ப்பாக பகோட விற்பது சிறந்த முடிவாக இருக்குமா?

நீங்கள் உள்ள தெருவில் பலரும் பகோடா விற்கத் தொடங்கினால் அதில் எப்படி நீங்கள் ஜெயிக்க முடியும்? உங்களால் பகோடவின் விலையை அதிகரிக்க கூட முடியாதே?


நீங்கள் ஆதரிக்கும் குறைந்தபட்ச வருமானத் திட்டப்படி அதனை அமல்படுத்திவிட்டு மானியங்களை ஒழித்துவிடுவது சரியானதாக இருக்குமா?

குறைந்தபட்ச வருமானத்திட்டத்தை செயற்படுத்தி ஆய்வுகளைச் செய்தால் மட்டுமே இந்தியாவில் அது எடுபடுகிறதா என்று தெரியும். நாங்கள் கென்யாவில் இதுபற்றி ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இதற்கான ஆய்வுத்தகவல்களைப் பெறுவோம் என்று நினைக்கிறேன்.

நன்றி - டைம்ஸ்