பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?
பசுமைப் பட்டாசுகள்
சாதாரண பட்டாசுகளுக்குப் பதிலாக அரசு பசுமைப்பட்டாசுகளை அறிமுகம் செய்திருக்கிறது. உண்மையில் பசுமைப் பட்டாசுகளின் சிறப்பு என்ன?
இதில் சாதாரண பட்டாசுகளை விட மாசுபடுதல் அளவு பிஎம் 2.5 எனும் அளவுக்கு இருக்கும். பட்டாசு தயாரிப்பில் பயன்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஜியோலைட் எனும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது அரசு நிறுவனங்களாக சிஎஸ்ஐஆர் என்இஇஆர்ஐ ஆகியவை பசுமைப் பட்டாசுகளுக்கான ஒன்பது மூலக்கூறு கலவையை உருவாக்கியுள்ளன. இவை 30 சதவீதம் மாசுபடுதலைக் குறைக்கும். இதில் ஒலி, ஒளி சந்தோஷம் குறைவுபடாது.
இந்தியாவில் பட்டாசுகளுக்கான சந்தை மதிப்பு 1800 கோடி. இவற்றின் தேவையை சிவகாசி பட்டாசுகள்தான் தீர்த்து வைக்கின்றன. இந்திய சந்தையில் சிவகாசியின் பங்கு 95 சதவீதம். இந்தியாவிலுள்ள எட்டு ஆய்வகங்கள் பசுமைப்பட்டாசுகளுக்கான மூலக்கூறு கலவையை ஆய்வு செய்து தயாரித்துள்ளன.
எந்த பட்டாசில் என்ன மாதிரியான ஆய்வுக்கலவை உள்ளது என்பதை க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.
களநிலவரம்
அரசு எட்டு ரகங்கள் என்றாலும் கடைக்கார ர்களுக்கு கிடைப்பது இரண்டுதான். அவையும் 30 -50 சதவீதம் விலை அதிகரித்துள்ளது சந்தைக்கு ஊக்கமான போக்கல்ல. பட்டாசுகளின் ஒலியை 90 முதல் 120 டெசிபலாக மாற்றவும் பட்டாசு தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
புதிய பட்டாசுகள் வந்தாலும், அவை சந்தைக்கு ஏற்றபடி நிறைய வரவில்லை. அடுத்த ஆண்டுதான் வரும் என்று கூறுகிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசுத் தொழிற்சாலைகள் தடைசெய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இதன் விளைவாக சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசுகளை தயாரிப்பதும் நடந்து வருகிறது. மொத்த பட்டாசுகளில் இதன் சதவீதம் 30 என்கிறார்கள்.
நன்றி - இடி மேகசின்