இடுகைகள்

பாலைய்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரட்டையர்களாக வந்து காதலியின் பெற்றோருக்கு பாடம் புகட்டும் நாயகன்! - மகாரதி - பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்

படம்
  மகாரதி   பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்  இயக்குநர் - பி. வாசு வாய்ப்பாட்டு கற்றுத்தரும் பள்ளி, நடனப்பள்ளி என இரண்டு பள்ளிகள் அருகருகே உள்ளன. இதை நடத்தும் நிறுவனர்கள் ஆண், பெண் என இருவருமே ஒருவரையொருவர் மிஞ்சவேண்டும் என துடிப்பாக உள்ளனர். இதில், வாய்ப்பாட்டு சொல்லித்தரும் பள்ளியில் பாலா என்ற ஆசிரியர் உள்ளார்.  இன்னொரு பள்ளியான நடனப்பள்ளியின் நிறுவனரான பெண்மணி வாய்ப்பாட்டு பள்ளியை மிஞ்ச நினைக்கிறார். ஆனால் அவருக்கேற்ற நடனம் சொல்லித்தரும் மாஸ்டர் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு கிருஷ்ணா என்ற நபர் அறிமுகம் ஆகிறார். வாய்ப்பாட்டு பள்ளி, நடனப்பள்ளி என இரண்டிலும் வேலை செய்யும் பாலா, கிருஷ்ணா ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கிறார்கள், விக் மட்டும் வேறுவேறு. யார் இவர்கள் என்பதுதான் கதை.  பாலைய்யா நடித்த மோசமான படங்களின் பட்டியலில் இந்தப்படமும் ஒன்று என்ற வகையில் சேருகிறது. இதில் பாலைய்யா என்ற பெயரில் வரும் ஃபிளாஷ்பேக் மட்டும் கோவை சரளா புண்ணியத்தில் சற்று ஆறுதலாக உள்ளது.  மற்றபடி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்றது என வரும் வசனமும் படம் நெடுக பாலைய்யா ஆடும் நடனமும் பாட்டும் பொறுத்துக்கொள்ளவே

பொப்பிலி சிங்கம் டாடியாகும் உணர்ச்சிகரமான கதை! - பொப்பிலி சிம்ஹம் - பாலைய்யா, மீனா, ரோஜா

படம்
  பொப்பிலி சிம்ஹம், 1994 பாலைய்யா, மீனா, ரோஜா Director:  A. Kodandarami Reddy Story by:  V. Vijayendra Prasad Language:  Telugu சரத்பாபு, ஆற்றில் நடைபெறும் விபத்தில் சிறுவன் ஒருவனைக் காப்பாற்றுகிறார். அவன் அவருக்கு மாப்பிள்ளையாகும் முறை கொண்டவன. அவனை ஊர் தலைவராக்க முயல்கிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி எதிர்கொண்டார், இதை எதிர்க்கும்  மனிதர் அதே ஊரில் இருக்கிறார்.  பொப்பிலி என்ற ஊரின் தலைவர்தான் விஜய ராகவ பூபதி. அதாவது பாலைய்யா. பதவியில் அமர்வதற்கான நாளன்று ஊர் பெரிய மனிதரின் அதாவது முதன்மை வில்லனின் மகனை அடித்து துவைத்துதான்  நாற்காலியில் அமர்கிறார். ஊரில் நடக்கும் அத்தனை பிரச்னைகளையும் வழக்குகளையும் அவர்தான் தீர்த்து வைக்கிறார். ஊருக்கே பெரிய மனிதர், கறைபடாத நேர்மையான மனம்தான் அங்கு இருக்கவேண்டும்.  தாய்மாமன் சரத் பாபுவின் ஆதரவில்தான் விஜய் நாற்காலியில் அமர்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் அவரை எதிர்த்து நின்று ஊர் முன்னே செருப்பால் அடிக்கும் தண்டனையைக் கொடுக்க நேரிடுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிரச்னையாகிறது. இந்த விவகாரத்திற்கு முன்னரே தாய்மகன் மகள் லலிதா, முறை மாமனைத்தான்

தம்பிக்காக தியாக மெழுகுவத்தியாகும் அண்ணன்! - கிருஷ்ணபாபு - பாலைய்யா, மீனா, மந்த்ரா

படம்
  கிருஷ்ணபாபு பாலைய்யா, மந்த்ரா, அப்பாஸ்  இயக்கம் - முத்தியாலா சுப்பையா வசனம் - தொட்டபள்ளி மது  கதை - சாந்தி அட்டாலா பாலைய்யா பெரிய ஜமீன்தாரின் மகன், அவரின் அப்பா பெண்களின் சபலமான ஆள். இப்படி இருக்கும்போது அவர் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். அந்த பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஜமீன்தாரின் அதிகாரப்பூர்வ முதல் மனைவியைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் தவறுதலாக மனைவிக்கு கொடுத்த விஷப்பாலை ஜமீன்தார் எடுத்து குடித்துவிட அவர் ரத்தவாந்தி எடுத்து பரலோக பிரவேசமாகிறார். இந்தப்பழி சிறுவனின் மீது சித்தியும் அவரது உறவினர்களும் போட சிறுவன் கிருஷ்ணபாபு சிறைக்கு செல்கிறான். அவனது அம்மா இந்த சோகம் தாங்காமல் இறந்துபோகிறார். இந்த நேரத்தில் கிருஷ்ணபாபுவின் தாய்மாமா தான் அனைத்து விஷயங்களையும் பார்த்து சொத்துக்களைப் பராமரிக்கிறார். கிருஷ்ணபாபு சிறையில் இருந்து வந்து என்ன செய்கிறார், தந்தை, தாய் இறப்புக்கு காரணமான சித்தி வகையறாக்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதே கதை.  படம் முழுக்க புத்திசாலித்தனமாக விஷயங்கள் என்பது கிளைமேக்ஸில் வரும் தம்பியைக் காப்பாற்றுவது மட்டுமே. வேறு எதுவும் கிடையாது. மற்றபடி தியாகம்

சாதி குலம் தெரியாத ராயலசீமா ரௌடியின் கதை! சீமா சிங்கம் - பாலைய்யா, சிம்ரன், ரீமாசென்

படம்
  சீமா சிங்கம் பாலகிருஷ்ணா, சிம்ரன், ரீமாசென், ரகுவரன், சரண்ராஜ்  ஜி. ராம் பிரசாத் வசனம் - பாருச்சி பிரதர்ஸ்  கதை - சின்னி கிருஷ்ணா தனஞ்ஜெய ராவ் என்பவரின் மகனை அவரது நண்பர் சந்திரசேகர் தனது பதவியுயர்வுக்காக காப்பாற்றத் தவறுகிறார். இதன் விளைவாக தீவிரவாதிகள் தனஞ்ஜெய ராவின் மகனை சுட்டுக்கொல்கிறார்கள். மகன் கொல்லப்படுவதைப் பார்க்கும் தனஞ்ஜெய ராவின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். இதனால் கோபம் கொள்ளும் தனஞ்ஜெய ராவ், சந்திரசேகரின் மகனையும் இதேபோல கொன்று புத்திரசோகத்தில் தவிக்க வைப்பேன் என்று சொல்லி பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு அவரது மனைவியைக் கவனித்துப் பார்ப்பதே கடினமாக இருக்க அந்த வேலையை அவுட்சோர்ஸிங் செய்கிறார். அப்போதுதானே பாலைய்யா திரையில் வரமுடியும். பாலைய்யா தனஞ்ஜெய ராவின் கோரிக்கையை தீர்த்து வைத்தாரா என்பதே மீதிக்கதை.   முதல் காட்சியில் கடிதம் ஒன்று பறந்து வருகிறது. கிராபிக்ஸ் ப்ரோ.. ஏழைப்பெண்ணின் இடத்தை அபகரித்துதான் போலீஸ் நிலையம் உருவாகி இருக்கிறது. அதை அடித்து உதைத்து தட்டிக்கேட்கிறார் துர்கா பிரசாத். அவர்தான் அங்கே லோக்கல் ரௌடி.  ஏழைப்பெண்ணின் வீட்டை அபகரிக்க பார்க

உடன்பிறவாத தம்பி சாகரின் குடும்பத்திற்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் திருடன் பிரபு! பலேவாடி பாசு - பாலைய்யா, ஷில்பா, அஞ்சலா

படம்
பலேவாடி பாசு பாலகிருஷ்ணா, ஷில்பா ஷெட்டி, அஞ்சலா ஜாவேரி இயக்கம் - பி.ஏ. அருண் பிரசாத் இசை - மணி சர்மா காட்டிலாகா அதிகாரியாக சாகர் அவர் வண்டி ஓட்டுநர் புதிதாக வந்து சேர்கிறார்கள். பழங்குடி மக்களுக்கு பல்வேறு குடியிருப்புகள், கல்வி, கணினி, டிவி வசதிகளை செய்து தருகிறார் சாகர். இதனால் மக்கள் அவரை வாழும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அங்கு சுனிதா என்ற இளம்பெண் வருகிறார். அவர் சாகர் என்ற பெயரில் அங்கு வேலையில் இருப்பவர், மோசடிக்காரர் என குற்றம்சாட்டுகிறார். அப்போதுதான் சாகர் என்பவர் யார் என அனைவரும் அறிகிறார்கள். உண்மையில் சாகர் என்ற பெயரில் அங்கு வேலை செய்பவர் யார் என்பதை பழங்குடி மக்களோடு நாமும் அறிவதுதான் கதை.  பாலைய்யாவின் குறையாத எனர்ஜிதான் படத்தைப் பார்க்க வைக்கிறது. படத்தில் பழங்குடி பெண்ணாக பிரிட்டிஷ் பெண் அஞ்சலாவை, லக்மே லிப்ஸ்டிக் கூட கலைக்காமல் ஜிலு ஜிலு உடை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வது? அவர் இல்லையென்றால் படத்தில் பாடல்களை எப்படி வைப்பது? லாஜிக் தானே? நிறைய லாஜிக் பார்த்தால் மேஜிக் மிஸ் ஆகிவிடும்.  படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உண்டு. யானைகளின

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள

எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

படம்
  அகண்டா - பாலகிருஷ்ணா(NBK) அகண்டா பொயபட்டி ஸ்ரீனு என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை.  கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யா