இரட்டையர்களாக வந்து காதலியின் பெற்றோருக்கு பாடம் புகட்டும் நாயகன்! - மகாரதி - பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்

 













மகாரதி  
பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின் 
இயக்குநர் - பி. வாசு





வாய்ப்பாட்டு கற்றுத்தரும் பள்ளி, நடனப்பள்ளி என இரண்டு பள்ளிகள் அருகருகே உள்ளன. இதை நடத்தும் நிறுவனர்கள் ஆண், பெண் என இருவருமே ஒருவரையொருவர் மிஞ்சவேண்டும் என துடிப்பாக உள்ளனர். இதில், வாய்ப்பாட்டு சொல்லித்தரும் பள்ளியில் பாலா என்ற ஆசிரியர் உள்ளார்.

 இன்னொரு பள்ளியான நடனப்பள்ளியின் நிறுவனரான பெண்மணி வாய்ப்பாட்டு பள்ளியை மிஞ்ச நினைக்கிறார். ஆனால் அவருக்கேற்ற நடனம் சொல்லித்தரும் மாஸ்டர் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு கிருஷ்ணா என்ற நபர் அறிமுகம் ஆகிறார். வாய்ப்பாட்டு பள்ளி, நடனப்பள்ளி என இரண்டிலும் வேலை செய்யும் பாலா, கிருஷ்ணா ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கிறார்கள், விக் மட்டும் வேறுவேறு. யார் இவர்கள் என்பதுதான் கதை. 

பாலைய்யா நடித்த மோசமான படங்களின் பட்டியலில் இந்தப்படமும் ஒன்று என்ற வகையில் சேருகிறது. இதில் பாலைய்யா என்ற பெயரில் வரும் ஃபிளாஷ்பேக் மட்டும் கோவை சரளா புண்ணியத்தில் சற்று ஆறுதலாக உள்ளது. 

மற்றபடி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்றது என வரும் வசனமும் படம் நெடுக பாலைய்யா ஆடும் நடனமும் பாட்டும் பொறுத்துக்கொள்ளவே கடினமான ஒன்று. 

படத்தில் பாலைய்யாவின் ஃபிளாஷ்பேக் ஏதோ பெரிய பழிவாங்குவதற்கானது போல சொல்லுகிறார்கள். ஆனால் அது அந்தளவு சீரியசாகவெல்லாம் கிடையாது. 

மீரா ஜாஸ்மின் மட்டும் தான் கொஞ்சநேரத்திற்கு கதையின் போக்கிலிருந்து சற்றே காப்பாற்றுகிறார். நல்லவேளை ஒரு காட்சியில் மீரா, கிருஷ்ணா மீது விழுகிறார். கிருஷ்ணா மீரா மீது விழுந்திருந்தால் அத்தோடு சோலி முடிந்திருக்கும். கடற்கரையோரம் வரும் பாலைய்யா பாத்திரத்தின் உடல்மொழியும், பிடரியில் அடித்துக்கொள்ளும் ஸ்டைலையும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

இரண்டு விக்

கோமாளிமேடை டீம் 








கருத்துகள்