புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்! - வரைபடம், மின்காந்தப்புலம், பூமியின் காந்தப்புல ஆய்வு, வேளாண்மை ஆய்வு
அருஞ்சொற்கள்!
ஏரோலாஜிகல் டயகிராம் (Aerological Diagram)
பாறைகளின் தன்மையை அறிய உதவும் வரைபடம். இதில் வெப்பநிலை, அழுத்தம். ஈரப்பதம் ஆகிய தகவல்களை அறியலாம்.
ஏரோமேக்னடிக் சர்வே (Aeromagnetic Survey)
பூமியின் மின்காந்தப்புலம் பற்றிய ஆய்வு. விமானங்களில் இணைக்கப்பட்ட மேக்னட்டோமீட்டர் (Magnetometer) மூலம் ஆய்வு நடைபெறுகிறது.
ஏயோலியானைட் (Aeolianite)
காற்றால் அடித்துக்கொண்டு வரப்படும் மணல் துகள்களால் உருவாகும் பாறைகள் .
ஏஎஃப்எம்ஏஜி இஎம் அமைப்பு (AFMAG EM)
இயற்கை நிகழ்வான புயல், மழையின் பிறகு பூமியின் இயற்கையான மின்காந்தப் புலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை அளவிடும் முறை.
அக்ரோமெட்ராலஜி (Agrometeorology)
வேளாண்மைக்கு ஏற்ற தன்மையில் வானிலை மற்றும் நிலத்தின் அடுக்குகள் உள்ளதா என ஆராயும் முறை.
கருத்துகள்
கருத்துரையிடுக