வயிற்றுக்குள் ஓர் புயல்! கடிதங்கள் - கதிரவன்

 








10.2.2022

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? 

உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் நெருக்கிக்கொண்டு இருக்கும். தங்களுக்கும் வேலைகள் அதிகரிக்கும்.  கட்டுரைகளை எழுதும் வேலைகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன. முன்னமே இதற்கான கட்டுரைகளை எழுதி வைத்துவிட்டேன். அதற்கான தேதிகளை மட்டும் மாற்றினால் போதும். மாதத்திற்கு எழுதியதால் பதிப்பிக்கும் தேதியை எடிட்டர் மாற்றிச் சொன்னார். இதனால் வேலை செய்யாமல் இருக்க முயலும் கோ ஆர்டினேட்டர் கட்டுரைகளை மாற்றத் தடுமாறிவிட்டார்.  கட்டுரைகளை அழிப்பேன் என மிரட்டுவதால், உதவி ஆசிரியர்களே அவர் செய்யும் வேலையை செய்து கட்டுரைகளை வேறு தேதிகளுக்கு மாற்றினோம். 

எண்ணெய் பலகாரங்கள் எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் தட்டு முட்டு சாமான்களை உருட்டுவது போல சத்தம் எழுகிறது. சிலசமயம் பலகாரங்களின் வாசனையைப் பொறுக்க முடியாமல் சாப்பிட்டால் இரவில் வயிற்று உப்புசம், வாந்தி, பேதி ஆகிறது. உடலை பராமரிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. 

எங்கள் நாளிதழ் பள்ளிகளுக்கு போகிறதா என்று தெரியவில்லை. குறைந்த பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள் என சீஃப் டிசைனர் சொன்னார். தகவல்படம் இனி நான் தான் செய்யவேண்டும். எனவே, கஷ்டமான துயரங்கள் இனி தொடர்கதைதான். சீஃப் டிசைனரோடு சேர்ந்து வேலை செய்வது என்றால் சும்மாவா? உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். பார்ப்போம். 

நன்றி!

அன்பரசு



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்