வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்









 

விஷால் பரத்வாஜ் 

இந்தி சினிமா இயக்குநர்


மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது. 

உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது?

பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது. 

இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன். 

நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா?

இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன். 

குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியாகும் படத்திற்கு நீங்கள்தான் தயாரிப்பாளர். மகனை கடுமையாக வேலை வாங்கினீர்களா?

நான் அவனுக்கு முதலாளி கிடையாது. அவனின் நண்பன்தான். கதையை எழுதுவதில் நானும் துணை எழுத்தாளராக உதவினேன். நாங்கள் இருவரும் இணைந்துதான் கதை, திரைக்கதை எழுதினோம். நாங்கள் யோசிப்பது சற்று முரண்பாடாக இருப்பது உண்டு. ஆனால் அதுதான் ஆரோக்கியமான கிரியேட்டிவிட்டி கொண்ட கூட்டணி முறை என நினைக்கிறேன். 

கோவிட் காலத்தை நினைவுபடுத்தும் பாடலான மாரேங்கே டு வாஹின் ஜாகர் பாடல் எதை கூற விரும்புகிறது?

நமக்கு வீடு என்பது முக்கியம். நான் உருவாக்கிய பாடல் அதைத்தான் கூறுகிறது. சோட் ஆயே ஹம் வோ கலியான் என்ற பாடல் வீட்டை விட்டு வெளியேறி நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பேசுகிறது. இந்த இயல்புக்கு மாற்றானது எனது பாடல். 













 தூரம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்