இடது, வலது பக்க மூளை ஆதிக்கம் கொண்டவர் என ஒருவரைக் கூறலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

 











பதில் சொல்லுங்க ப்ரோ?




நாய்கள் உணவை வேகமாக உண்டால், அதை விரும்புகின்றன என்று அர்த்தமா?


அப்படி கூற முடியாது. அறிவியலாளர்கள் உணவை வேகமாக சாப்பிடும் நாய்களுக்கு மரபணு ரீதியாக பிறழ்வு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த வகையில் லேப்ரடார் இன நாய்கள் உணவை அதிக ஆர்வத்தோடு வேகமாக சாப்பிடுவதும், உடல் பருமனால் அவதிப்படுவதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாயின் நாக்கில் மனிதர்களை விட சுவை மொட்டுகள் குறைவு. அவற்றால் இனிப்பு, கசப்பு, காரம் ஆகிய சுவைகளை உணர முடியும். ஆனால் மனிதர்களை போல சுவையை முழுமையாக அனுபவித்து அறிய முடியாது. 


ஒருவர் இடது அல்லது வலது மூளை ஆதிக்கம் கொண்டவர் என கூறலாமா?


வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள், கலையார்வம் கொண்டவர்கள் ; இடது மூளையின் ஆதிக்கம் கொண்டவர்கள், ஆராயும் இயல்பும், கணித திறமையும் கொண்டவர்கள் என கூறுவார்கள். இந்த கருத்தில் உண்மை இல்லை. மூளையைப் பொறுத்தவரை இடது, வலது என இரு பகுதிகளும் இணைந்துதான் செயல்படுகின்றன. இடது, வலது என இரு மூளைப்பகுதிகளையும் இணைக்கும் நரம்பிழைகளுக்கு கார்பஸ் கலோசம் (Corpus callosum) என்று பெயர். உடலின் மோட்டார் செயல்பாடுகள், கலை, கணிதம் ஆகிய இரு திறன்களுக்கும் இடது, வலது மூளைகள் இணைந்தே பங்காற்றுகின்றன. 


BBC science focus July 2022

Pixabay


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்