கல்விச்சான்றிதழ் மோசடிகளை வெளியே கொண்டு வரும் டிவி ரிப்போர்ட்டரின் அக, புறவாழ்க்கை! - அர்ஜூன் சுரவரம் - நிகில் சித்தார்த்
பேக் டூ பேக்காக நிகில் சித்தார்த்தின் அடுத்த படம் இது.
அர்ஜூன் சுரவனம்
நிகில் சித்தார்த், லாவண்யா திரிபாதி
இயக்கம் டி சந்தோஷ்
இசை சாம் சிஎஸ்
கணிதன் படத்தை தெலுங்கு மொழியில் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் உருப்படியான விஷயம். காதல், காதல் தொடர்பான காட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை. படத்திலும் அதற்கான தேவையில்லை. போலி கல்வி சான்றிதழ்களை உருவாக்கி தவறான மனிதர்களை தற்குறிகளை அரசு வேலை, தனியார் வேலைக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனம் மாபியா ஆட்களை வைத்து செய்கிறது. இதை அடையாளம் கண்டுபிடித்து தனது மீதுள்ள களங்கத்தையும் பிற மக்களையும் எப்படி ஒருவன் காப்பாற்றுகிறான் என்பதே....
முதல் காட்சியில் ப ப் ஒன்றில் கார் கீ போல தெரியும் ஸ்பை கேம் ஒன்றை பொறுத்தி காட்சிகளை படம் பிடிக்கிறார்கள். அதை ஒருவன் தட்டிவிட்டுவிட அது நாயகி கையில் மாட்டுகிறது. அவள் அதை உடனே தரமாட்டேன் என நிறைய விவரங்களைக் கேட்கிறாள். அதற்கு அர்ஜூன் போலியான தகவல்களைக் கொடுக்கிறான். பிறகு சூழல் என்னாகிறது என்றால், அதே டிவி சேனலில் பப்பில் குத்து ஆட்டம் ஆடிய நாயகியும் சேர்கிறாள். பிறகுதான் அர்ஜூன் சொன்ன பொய் தெரிய வருகிறது. இதனால் அனைவரின் முன்னாலும் அவனை ஓங்கி அறைந்துவிடுகிறாள். பிறகு டிவி சேனல் அதிபரான தனது அப்பா மூலம் உண்மை தெரிந்தவுடன் அவனை நேசிக்கத் தொடங்குகிறாள். இதுதான் காதல் காட்சிகளுக்கான நேரம். மற்றபடி கஃபேயில் உட்கார்ந்திருக்கும் அர்ஜூனை போலீஸ் எட்டி உதைத்து கீழே தள்ளி அடித்து உதைத்து கைது செய்கிறது. காவல்நிலையத்திற்கு சென்ற பிறகுதான் அவனுக்கு தெரிகிறது, போலியாக அவனது பெயரில் இன்னொருவர் சான்றிதழை தயாரித்து கல்விக்கடன் வாங்கியுள்ளது பிறகுதான் அ்வனுக்கு தெரிகிறது. சிறைக்கு செல்லும்போது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் தற்கொலை செய்கிறான். இதனால் கைதானவர்களை சிறையில் அடைக்காமல் நீதிமன்றம் பிணை வழங்குகிறது. அந்த பிணை மூலம் அர்ஜூன் தனது ரிப்போர்ட்டர் புத்தியை வைத்து விஷயங்களை ஒன்றாக சேர்த்து கண்டுபிடிக்கிறான். பர்மா மேன்ஷன் எனுமிடத்தில் போலி சான்றிதழ்களை தயாரிக்கும் வேலை நடப்பதை அரும்பாடுபட்டு கண்டுபிடிக்கிறான். எப்படி அந்த உண்மையை உலகிற்கு சொன்னான் என்பதே மீதிக்கதை.
நிகில் சித்தார்த் இதற்கு முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு வயது மட்டும் காரணமல்ல. கதையைத் தேர்ந்தெடுப்பதிலும் திறமை கூடியிருக்கிறது. படம் நெடுக தான் என்ன வேலை செய்கிறோம். எதற்கு செய்கிறோம் என்பதை கவனமாக விழிப்புணர்வுடன் செய்கிறார். அதனால்தான் டிவி உரிமையாளருக்கு மட்டுமல்ல அங்குள்ளவர்களுக்கும் அவன் மேல் மதிப்பு கூடுகிறது. படிக்காதவர்கள் வேலை செய்யும்போது உருவாகும் பிரச்னை பற்றி தனது அப்பாவுக்கும் விளக்கும் காட்சி படத்தில் உணர்ச்சிகரமான முக்கியமான இடம். எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். லாவண்யாவுக்கு இதில் நாயகனுக்கு உதவி செய்து அவனைக் காப்பாற்றுவதுதான் முக்கிய வேலை. தன்னை விசாரிக்கும் அதிகாரி கிஷோரிடம் பேசுவதுதான் பின்கதையாக விரிகிறது. என்னை எப்படி நம்பினாய் என அவர் கேட்கும் கேள்விக்கு நிகில் சொல்லு்ம் பதில் அபாரமானது.
புலன் விசாரணை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக