இடுகைகள்

இனவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாம் போராடினால்தான் பிழைக்க முடியும்! - லைபாக்லை ஆன்ட்டி- ச.சுப்பாராவ்

படம்
  சென்னை புத்தக காட்சி 2021 நந்தனம் ஒய்எம்சிஏ லைபாக்லை ஆன்ட்டி  க.சுப்பாராவ் பாரதி புத்தகாலயம் ரூ. 100 வடகிழக்கு கலாசாரம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கதைகள் என்று கூறுகிறார்கள். உண்மையில் இத்தொகுப்பில் அதற்கு ஏற்றாற்போல இருப்பது நான்கு கதைகள் மட்டுமே. மொத்தம் பதினான்கு கதைகள் தொகுப்பில் உள்ளன.  மற்றொரு மோதி என்ற சிறுகதை, ஏழ்மை ஒரு பெண்ணை எந்தளவுக்கு மனத்தை கரைத்து அவளது நிலையை தாழ்த்துகிறது என்பதை கூறுகிறது. எளிமையாக சொன்னால் பசிதான். அரிசி கிடங்கு அருகே ஏழைகளின் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு வரும் லாரிகள் எப்போதும் போக்குவரத்து பிரச்னைகளால் அடிக்கு நின்று கொண்டிருக்கும். அப்படி நிற்கும் லாரிகளிலிருந்து அரிசி, பருப்பை ஊசி வைத்து குத்தி திருடுவது அங்கு வாழும் சிறுவர்களின் வேலை.  அப்படி செய்யும்போது, மோதி என்ற சிறுவன் பலியாகிறான். அவன் இறந்துபோனதற்கு அவன் அம்மா முதலில் அழுதாலும் பின்னர் மனம் தேறி இயல்பு வாழ்க்கைக்கு வர பசிதான் காரணமாக உள்ளது. அதன் காரணமாக அவள் எடுக்கும் முடிவுதான் சிறுகதையின் இறுதிப்பகுதி. உணர்வுப்பூர்வமான கதை.  பாசனின் பாட்டி, சிறுகதை வங்காளி குடும்பத்திற்கும் பழங்குடி