இடுகைகள்

பாடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி கல்

வரலாற்றை மாற்றும் ஆட்சியதிகாரம்!

படம்
  அதிகாரம் எந்த இடத்தில் பொய் சொல்லும்?  செல்வம், அரசியல்கட்சி அலுவலகம், காவல்துறை, ராணுவம்? இதில் எந்த பதிலைத் தேர்ந்தெடுத்தாலும் தவறுதான். ஏனெனில் அதிகாரம் என்பது அறிவை உருவாக்கும் இடத்தில் தான் பொய்களை ஏராளமாக கூறும். ஏன், அறிவை அதிகாரம் தேர்ந்தெடுக்கிறது? அதுதான் மக்களை உஷார் படுத்துகிறது. அவர்களை உயர்ந்தவர்களாக்குகிறது. எச்சரிக்கை செய்கிறது.  இங்கு அறிவு என்பது கருவிதான். அதை யார், எப்படி, என்ன பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். ரஷ்யா, தனது பள்ளி பாடப்புத்தகங்களில் உக்ரைன் மீது எதற்கு போர் தொடுக்கிறோம் என்பதற்கான காரணங்களை கூறியிருக்கிறது என கார்டியன் பத்திரிகை கூறியிருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர்களின் தேவைக்கேற்ப பாடங்களை மாற்றியமைத்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வே அறிக்கைகள், என நிறைய விஷயங்களை மாற்றியமைத்தனர். இப்படித்தான் இந்தியர்களின் மூளையை மாற்றியமைத்து தங்களுக்கு ஆட்சிக்கு சாதகமாக மாற்றினர். நாம் இன்றுவரையில் கூட அவர்கள் உருவாக்கிய பல்வேறு விஷயங்களிலிருந்து முழுமையாக மாறவில்லை.  சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி நீண்ட

பாடச்சுமை குறைவு - ராஜஸ்தான் மாணவர்கள் கொண்டாட்டம்!

படம்
ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாடநூல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நான்கு நூல்கள் தற்போது ஒரு நூலாக குறைந்துள்ளது. இதனால் மாணவர்கள் சுமக்கும் பாடச்சுமை பெருமளவு குறைந்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள 33 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பாடச்சுமைகளை அரசு குறைத்துள்ளது. 1.35 கிலோகிராமிலிருந்து அரை கிலோவாக பாடப்புத்தகங்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை பிகேபிகே என்கிறார்கள். பஸ்தே கா போச் காம் என்று இதனை விரிவாக சொல்லலாம். தற்போது இத்திட்டத்தை ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை அமல் செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகச்சுமையை குறைக்கவிருக்கிறோம் என்கிறார் ராஜஸ்தான் கல்வி அதிகாரி பிரதீப் குமார் போரர். கல்வி அமைச்சர் குரு கோவிந்த் டோசந்த்ரா, இதனை கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தினார். சுமை குறைந்த பாடப்புத்தகங்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த புத்தகங்களின் பாடங்கள் உருவாக்கம் ஆகியவற்றை பிரதீப் குமார் கனவு கண்ட உருவாக்கியிருக்கிறார். இதில் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளின் பாடம் கற்கும் திறனை இவை

ஹோம் ஸ்கூலிங்கை விட அன்ஸ்கூலிங்குக்கு கூடுது மவுசு!

படம்
இந்தியப் பெற்றோர்கள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதைவிட மாற்றுவழிக் கல்வி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். காலையில் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி வைத்து, பின் மாலையில் டியூசன் முடித்து அவர்களை இரவில் வீட்டுக்கு கூட்டிவருவது  இனி தொடரப்போவதில்லை. தற்போது பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் அமைந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல கல்வி அறிவுடன் உருவாவது சாத்தியம். இந்தியாவிலுள்ள பெற்றோர்கள் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள்  மீதான நம்பிக்கையினமை அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டிலேயே பாடங்களைக் கற்பிப்பது (Homeschooling), அனுபவங்கள் மூலமாக குழந்தைகளை சுதந்திரமாக கற்க அனுமதிப்பது (unschooling) ஆகிய முறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறி பாடம் சொல்லித் தருவதிலும் பாடத்திட்டம் உண்டு. அதில் வேலைவாய்ப்புக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற முடியும். அதேசமயம் அனுபவங்கள் மூலம் கல்வியைக் கற்றுவரும் குழந்தைகள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற நெருக்கடியைச் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களின் பெற்றோரின் பொருளாதார பலம்தான்.  இவர்களும் விரும்பினால் தேர்வு