இடுகைகள்

உலகமக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!

படம்
  உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!  பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், உலக மக்கள் அனைவருக்குமான புதிய உணவு முறையைத் தயாரித்துள்ளனர். உலக மக்கள் தம் பொருளாதார வசதி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உணவுமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் நிலப்பரப்பு சார்ந்த உணவுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த உணவுகளிலும் ஒருவருக்கு தினசரி அவசியத்தேவையான சத்துகள் (தோராயமாக 2500 கலோரி) கிடைக்கிறதா என்றால் இல்லை என்று கூறவேண்டும்.  புதிய டயட் அறிமுகம் இதற்கு தீர்வாகத்தான் முப்பது ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் இதழில் வெளியாகி உள்ளது. கார்போ டயட் முதல் பேலியோ டயட் வரை எக்கச்சக்க டயட்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது எதற்கு புதிய டயட்? நாம் தற்போது சாப்பிடும் உணவு முறைகள் பூமிக்கும் நம் உடலுக்கும் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம்.  பசுமை இல்ல வாயுக்கள், செயற்கை உரங்கள்(நைட்ரஜன், பாஸ்பரஸ்), நிலவளம் சீர்குலைவு, உணவு வீணாதல் ஆகிய பிரச்னைகள் தற்போது பெரி