ஹூவாவெய்யை குழுவைத் திரட்டி வேட்டையாடும் ஓநாய் என்றே கூறலாம். வாசனையை முகரும் மூக்கு, மூர்க்கமான குணம், குழுவாக வேட்டையாடும் இயல்பு ஆகியவற்றை வைத்தே ஓநாய் இன்றும் உலகில் மனிதர்களை சமாளித்து வாழ்கிறது. இல்லையெனில் பிற விலங்குகளைப் போல எப்போதோ அழிந்து போயிருக்கும். ஹூவாவெய் நிறுவன உள்நாட்டு ஊழியர்களுக்கு அதன் நோக்கம் எளிதாக புரியும். ஆனால் வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு முதலில் கடின உழைப்பு என்பதே புரியவில்லை. பின்னர்தான் அதை ஏற்றுக்கொண்டனர். 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையில் தவித்தபோது ஜெர்மனி மட்டுமே சற்று சரிவில்லாமல் இருந்தது. இத்தனைக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவழிக்கும் நாடுதான் அது. பொறியியல் துறையில் ஜெர்மனி செய்த சாதனைகள் அதிகம். இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓவியர்கள் என பல்வேறு ஆளுமைகளை உருவாக்கி உலகிற்கு அளித்த நாடு அது. ஹூவாவெய் நிறுவனத்தில், ரென்னுக்கு 1.42 சதவீத பங்குள்ளது. மீதி அனைத்தும் ஊழியர்களுடையதுதான். நிறுவனத்தின் பங்குகளை பிரித்துக்கொடுப்பத...