இடுகைகள்

சமூக பொறுப்புணர்வு திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிஎஸ்ஆர்: தன்னாவலர்களின் பங்களிப்பும், திட்டத்தின் நோக்கமும்!

படம்
என்பிசி 8 தன்னார்வலர்களின் பங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களை இணைத்துக்கொண்டு பணிபுரிகின்றனர் . ஆனாலும் முடிந்தவரை இந்த செயல்பாட்டில் தங்கள் நிறுவன ஊழியர்களின் பங்கினையும் உறுதி செய்கின்றனர் . காரணம் , நிறுவனத்தின் சமூகம் சார்ந்த ஈடுபாட்டை , பொறுப்பை ஊழியர்கள்தானே பிறருக்கு சொல்ல முடியும் .? ’ ரிவல்யூஷன் ஆப் தி ஹார்ட்’ என்ற நூலில் ஆசிரியர் பில் ஷோர் நிறுவனங்கள் தம் ஊழியர்களை ஈடுபடுத்தி செய்யும் சமூகப்பணிகளைக் குறிப்பிடுகிறார் . மருத்துவர் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை இலவசமாக சோதிப்பது , தச்சு வேலைக்காரர் மரச்சாமான்களை பழுதுநீக்கிக் கொடுப்பது , ஆசிரியர் வறுமைகோட்டிற்கு கீழுள்ள தெரு சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பது ஆகியவை செயல்பாடுகள் சமூகப் பொறுப்புணர்வுக்கு முக்கியமான சான்றுகள் என்கிறார் . இது இனக்குழு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் . மேற்சொன்னவை தன்னார்வ செயல்பாடுகளாகும் . நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட நாட்களை சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களுக்காக ஒதுக்கி பணிகளைச் செய்ய வைப்பது

சிஎஸ்ஆர்: தன்னார்வ பங்களிப்பும், லாபமும்!

படம்
7 நிறுவனங்களின் பங்களிப்பு தேர்தல் , தண்ணீர் தட்டுப்பாடு , உறுப்பு தானம் , சாலை விபத்து ஆகிய விஷயங்களுக்கு பெருநிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன . இதற்கு பெரும்பாலான நிதியை குறிப்பிட்ட நிறுவனம்தான் செலவிடும் . இம்முறையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி இந்து , இ்ந்துஸ்தான் டைம்ஸ் போன்ற தேசிய நாளிதழ்கள் தண்ணீர் தட்டுப்பாடு , வாக்குரிமை , பழமையான நகரங்கள் பற்றிய செய்திக்கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடுகின்றன . மேற்சொன்ன துறைகளில் வல்லுநர்களை , ஆய்வாளர்களை கூட்டி வந்து பொதுநலனுக்கான பல்வேறு ஆய்வு கூட்டங்களையும் நடத்துகின்றன . நாளிதழ்களின் அடிப்படையான பணி , அறிவை மக்களுக்கு புகட்டுவதுதான் . அதோடு தன்னை மக்களில் ஒருவராக கருதும் பத்திரிகைகள்தான் மக்களுக்கான பங்கேற்பு பகுதிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டு வருகின்றன . இதில் தேசிய நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூக பிரச்னை சார்ந்து அத்துறையில் செயல்படும் முன்னணி தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது . தனியார் நிறுவனங்கள் இந்த பாணியை பின்பற்றுவதோடு தாங்கள் சார்ந

சிஎஸ்ஆர்: கற்றதும் பெற்றதும்

படம்
டிஎன்ஏ இந்தியா 6 கற்றுக்கொண்டது என்ன ? 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவான பாடிஷாப் என்ற நிறுவனம் அழகுப் பொருட்களை 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்று வந்தது . இக்காலகட்டத்தில் தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அழகுசாதனப் பொருட்களை சோதித்துப் பார்க்க விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற பிரசாரத்தில் இறங்கியது . அக்காலத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை அறிவியல் சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்தனர் . பல்வேறு போராட்டங்கள் , பேரணிகள் , விழிப்புணர்வு கண்காட்சிகள் காரணமாக ஐரோப்பிய யூனியன் இதனை தடுக்கும் விதமாக 2002 இல் சட்டம் ஒன்றை இயற்றியது . இந்த சமூக பொறுப்புணர்வு திட்டம் காரணமாக பாடிஷாப் நிறுவனம் திரட்டி அனுப்பிய புகார் மனுக்களின் எண்ணிக்கை 40 லட்சங்களுக்கும் அதிகம் . கற்றதும் , பெற்றதும் ! துறைசார்ந்த பிரச்னையை கையில் எடுக்கவேண்டும் . அதேசமயம் அதனை ஊழியர்களும் , வெளியிலுள்ள மக்களும் ஏற்கும் விதமாக அமைக்கவேண்டும் . எடுக்கும் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருக்க அவசியமில்லை . ஆனால் குறைந்தபட்சம் ஊடகங்களில் விவாதிக்கப்படும் அளவ

வணிகத்தில் சமூகப் பொறுப்பு - சமூக பொறுப்புணர்வு திட்டம்!

படம்
பிக்சாபே 2 சமூக பொறுப்புணர்வின் தொடக்கம் அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு பங்களிக்கும் விதமாக விதிகளை மாற்ற உத்தரவிட்டது . அக்காலம் தொடங்கி அங்கு சமூகப்பிரச்னைகளுக்கு நிறுவனங்கள் நிதி மட்டும் அளிக்காமல் , அப்பிரச்னையைத் தீர்க்க பாடுபடும் செயல்பாடுகளைத் தொடங்கின . இதனைப் பற்றிய கட்டுரை ஒன்றை செய்தியாளர் கிரெய்க் ஸ்மித் 1994 ஆம் ஆண்டு ஹார்வர்ட் ரிவ்யூ இதழில் எழுதியுள்ளார் . அதில் மற்றொரு முக்கியக்காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது எக்ஸான் வால்டெஸ் என்ற நிறுவனம் எண்ணெய்யை கசிய விட்ட செய்தி . இதன் விளைவாக சூழல் மாசுபட்டது . இதையொட்டியே சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களும் முன்னெடுத்தன . இதற்கான சட்டங்களை அரசு உருவாக்கியது . இதற்கு பத்தாண்டுகள் முன்பே 1960-70 காலகட்டத்திலேயே அமெரிக்க நிறுவனங்கள் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்ற குரல்கள் மக்களிடையே எழத் தொடங்கிவிட்டன . இதன் காரணமாக , 1980 களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவில் குறைவான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பல்வேறு சமூக