இடுகைகள்

யுனைடெட் வே மும்பை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யுனைடெட் வே மும்பையின் தூய்மைப்பணி

படம்
  கடற்கரைகளை சுத்தம் செய்யும் குழு! மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம், 40 கல்லூரி மாணவர்கள் குழு, மஹிம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இக்கழிவுகள், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யுனைடெட் வே மும்பை என்ற தன்னார்வ நிறுவனத்தின் பெயரில் தூய்மை பணிகளை மாணவிகள் செய்தனர்.  2017ஆம் ஆண்டு யுனைடெட் வே மும்பை தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் யுனைடெட் வே வேர்ல்ட் என்ற உலகளாவிய அமைப்பின் இந்திய பிரிவு ஆகும். முமைபையிலுள்ள தன்னார்வ அமைப்பு, 11 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்து 98 ஆயிரம் கிலோ கழிவுகளை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்பது கடற்கரைப் பகுதிகளை இந்த அமைப்பு சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ”கடலில் வந்து சேரும் ஆறுகளில் ஏகப்பட்ட கழிவுகள் உள்ளன. அவற்றைக் குறைத்தாலே கடற்கரையில் ஒதுங்கும் கழிவுகளை குறைக்கலாம். நாங்கள் மும்பை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியில் உதவுகிறோம்” என்றார்  யுனைடெட் வே மும்பை அமைப்பின் துணைத்தலைவர் அஜய் கோவலே.  கடற்கரையைச் சுற்றியுள்ள சுவர்களில் வண்ணம் தீட்டுவது, குப்பைகளை போடக