இடுகைகள்

ஹாசெட் புக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த