இடுகைகள்

பழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது அம்மாவை அடித்தவர்களை பழிவாங்கும் எவர்க்கும் கீழ்ப்படியாத குணம் கொண்ட நாயகனின் போராட்டம்!

படம்
 தி வேஸ்ட்ரல் டர்ன்டு டு லெஜண்ட் மினி டிராமா டிராமா ரஷ் யூட்யூப் ராணுவ தளபதி குடும்பம். தளபதி இறந்துவிடுகிறார். அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே. அவன் அரசு வேலைக்கு கூட முயலாமல் தத்தாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். ரே டுன் என்ற அவனது உடலில் வேறொருவரின் ஆன்மா உள்ளே புகுகிறது. அவனது குடும்பத்தில் அம்மா மருத்துவர். அவரது வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனுக்கு அம்மா, அவர்கள் வளர்ப்பு பிள்ளையாக வளரும் பெண் சூ என்ற பெண் பிள்ளை இருக்கிறாள். நாயகன் ரேவுக்கு சூ தங்கை போல.  ரே டுன்னின் குடும்பம் நொடித்துப்போனதால் அவனோடு நகரத்தின் அட்மிரல் வார்ட் செய்துகொண்ட திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறார். அதற்கு அவர் ஒரு நாடகம் ஆடுகிறார். அதாவது, நாயகன் ரே வாழும் வீட்டை வார்ட் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவன் வாங்கிக்கொண்டதாக, அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகிறான். அப்போது வார்ட் காப்பாற்றுவது போல வந்து வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன். கல்யாண ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்கிறார். அதை ரே ஏற்றுக்கொள்வதில்லை.  வீட்டை காலி செய்ய வந்தவன், நாயகன் மீது பெண்ணை மானபங்கம் செய்வ...

வாசனை திரவியம் தயாரித்து பாலுறவுக்கு உந்தி காதல் மோசடி செய்யும் பெண்களை தண்டிக்கும் நாயகன்!

படம்
  கம்மாத்து தெலுங்கு சுவாதி தீக்சித் ஆங்கிலத்தில் வெளியான பர்ஃப்யூம் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதன் மலினமான தழுவல். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு கதை திரைக்கதை வசனம் என இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். கூச்சமே இல்லை. ஒரு படத்தை தழுவி இன்னொரு படத்தை எடுப்பது முற்றாக தவறு இல்லை. ஆனால், மூலப்படத்தை கேவலப்படுத்தாத வகையில் எடுக்கலாம். அதைவிட மேம்படுத்தி எடுக்கலாம். இப்படி எந்த இரண்டு வகையில் வராத மாதிரி படத்தை கிண்டி வைத்திருக்கிறார் இயக்குநர். அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் என்றாலே மூக்கு கண்ணாடி போட்டிருக்கவேண்டும். முடியை வெட்டாமல் விடவேண்டும் என கிளிஷே அவதாரமாக நாயகன் பாத்திரம் உள்ளது. பள்ளியில், கல்லூரியில் நன்றாக நடிப்பவர். ஆபாச படத்தை நண்பர்களுடன் பார்த்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாக காம உணர்வை தூண்டவேண்டும் என லட்சியம் கொள்கிறார். முதுகலை படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் அபார்ட்மென்ட் வாடகை, சாப்பாடு, அவரது அருகிலுள்ள திரைப்பட உதவி இயக்குநருக்கான உணவு, மதுபான செலவு எல்லாம்.... அந்த பக்கத்து வீட்டு அண்ணன் பாத்திர...

தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !

படம்
  பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...

சக நண்பர்களைக் கொன்று துரோகம் செய்த முரிம் கூட்டணி அமைப்பின் தலைவரை பழிவாங்க துடிக்கும் இளம்பெண்!

பிளாக் சர்பென்ட் வெப்டூன்.காம் காமிக்ஸ் முரிம் கூட்டணி, பிளாக் சர்பென்ட் என்ற வலிமையான படையை பயிற்சி கொடுத்து உருவாக்குகிறது. தீயசக்தி இனக்குழுவை அழிக்க பயன்படுத்துகிறது. ஆனால், இறுதியில முரிம் கூட்டணி தலைவர், பிளாக் சர்பென்ட்படையை துரோகம் செய்து அவர்களை முற்றாக அழிக்கிறார். ஏனெனில் அப்படையினர், ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள். பெற்றோர் இல்லாதவர்கள். குழுவின் தலைவி, ஜியோன்மா, படுகாயமுற்றாலும் உயிர் பிழைத்து முரிமை பழிவாங்க முற்படுவதுதான் கதை. ஆதரவற்ற வலிமையான தற்காப்புக்கலை கொண்ட இளம்பெண்ணின் கதை. ஈட்டிதான் அவளின் ஆயுதம். தன்னையொத்த வீரர்களை துரோகம் செய்து முரிம் கூட்டணி ஏமாற்றியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, படுகாயமுற்ற நிலையில் கூட தன்னை பிழைக்க வைத்துக்கொண்டு எதிரிகளை கொல்ல நினைக்கிறாள். அப்படி வரும் வழியில் ஒயிட் பந்தனா என்ற கொள்ளைக்கூட்டத்தினரை சந்திக்கிறாள்.அவர்கள்,அவளை வல்லுறவு செய்து அனுபவிக்க நினைக்கிறார்கள். நாயகி ஈட்டியைச் சுழற்ற தலை காற்றில் பறக்கிறது. மெல்ல கொள்ளைக்காரர்களின் தலைமையிடத்திற்கு வந்து அத்தனை பேரையும் ஒரு விஷயம்தான் கேட்கிறாள். சாப்பிட சோறு இருக்கி...

தாயை மீட்பதை விட்டுவிட்டு கவர்ச்சிப் பெண்கள் பக்கம் மடைமாறும் நாயகன்!

படம்
    வென்ஜென்ஸ் ஆஃப் ஹெவன்லி டீமன் மங்காகோ.காம் 70 க்கும் கூடுதலாக அத்தியாயங்கள் மு குடும்பத்தைச் சேர்ந்தவன் நாயகன் மு. இவனுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள ரத்தம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறி அடித்து உதைத்து தற்காப்புக்கலை கற்கும் உடல் பாகங்களை சிதைத்து அனுப்புகிறார்கள். இவனது சகோதரன்தான் அதை செய்கிறான். குற்றுயிராக கிடப்பவனை வயதான மாஸ்டர் ஒருவர் எடுத்து உயிரைக் காப்பாற்றி, சில பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கிறார். அப்போதுதான் நாயகனுக்கு ஹெவன்லி டீமன் இனக்குழுவின் ரத்தம் தனக்குள் ஓடுகிறது என தெரியவருகிறது. அவனது குடும்பம் அவனை வெளியே தள்ளிவிட்டது. அவனது அம்மா, அப்பாவின் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். நாயகனுக்கு அம்மாவை மீட்பதுதான் முக்கியம். அவனால் அம்மாவை மீட்க முடிந்ததா, இடையில் சந்தித்த திருடர்கள், ஆகாய நகர தூதர்கள், வெட்டிப்பெருமை பேசும் பணக்கார வாரிசுகள் என நிறையப் பேர்களை நாயகன் மு எதிர்கொண்டு சண்டை போடுகிறான். மங்காகோ.காமில் காமிக்ஸ் படங்களை குறிப்பிட்ட முறையில் வெட்டி ஒட்டி பதிவிடுகிறார்கள். அது அனைத்து காமிக்ஸ் கதைகளுக்கும் பொருத்தமாக இல்லை. சிலசமயங்களில் படங்கள் த...

பலவீனமான இளைஞனின் உடலுக்குள் புகுந்து துரோகிகளை பழிவாங்கத் தொடங்கும் தற்காப்புக்கலை மாஸ்டரின் ஆன்மா!

படம்
          டாமினேட்டர் ஆப் மார்சியல் காட்ஸ் எபிசோடு 29 சீன டிராமா குயின் சென்னுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். குயின் குடும்பம், நாட்டின் ராணுவத்தில் உயர்பதவிகளைப் பெற்றுள்ளது. அத்தனைக்கும் குயின் சென்னின் தாத்தா, குறிப்பிட்ட எல்லைப்பிரிவுக்கு தலைவராக இருப்பதால் சாத்தியமானது. அவரது மகள் குயின் யூசெ, முகம் தெரியாத ஒருவரை காதலித்து மணம் செய்துகொள்கிறாள். குழந்தை பிறந்தபிறகு, தந்தையின் வீட்டுக்கு வருவதால் ஊர் அவர்களை ஏசுகிறது. இப்படி வளரும் குயின்சென்னுக்கு, ஆன்ம ஆற்றல் பெரிதாக வளரவில்லை. அந்த நேரத்தில் அவனது உடலுக்குள் சொர்க்கத்தில் உள்ள கடவுளின் ஆன்மா உள்ளே நுழைகிறது. அவருக்கு துரோகம் செய்த நண்பன், மோசம் செய்த காதலி ஆகிய இருவரை பழிவாங்கும் நோக்கம் உள்ளது. அதை குயின்சென்னின் பலவீனமான உடலைக் கொண்டு எப்படி செய்கிறார் என்பதே கதை. இப்படியான கதைகள், மாங்கா வடிவில் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. எனவே, கதையில் பெரிய ட்விஸ்டுகள் ஏதுமில்லை. பொதுவாக பார்வையாளர்கள் நினைக்கும்போது பாட்டு, காமெடி என போக்கிரி படத்தில் காட்சிகள் வருமே அதேபோல்தான் இங்கும் நடக்கிறது. முக்...

நூறு கிராம் முதுகெலும்பு!

படம்
        நூறு கிராம் முதுகெலும்பு! மல்யுத்த வீரருக்கு எதிராக பல கட்டுரைகள், விளக்கங்களை அம்பானி, அதானி வாங்கியுள்ள ஊடகங்கள், நாளிதழ்கள் முன்வைக்கின்றன. நாடாளுமன்றத்தில் மதவாத கட்சி எம்பிகள், இது விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர்களுக்கு ஒரு பாடம் என நக்கலாக பேசுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை, கடைசி சிரிப்பு எங்களுடையது என குறியீடாக பதிவொன்றை இடுகிறார். இந்திய ஆட்சித்தலைவர், மல்யுத்த வீரரின் வெற்றிக்கு பாராட்டவில்லை. தகுதிநீக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர்,மல்யுத்த வீரருக்கு இதுவரை ஆன செலவுகளை எடுத்து படிக்கிறார். ஒரு நாடு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இவை.   என்ன எழுதினாலும் கேலி சித்திரக்கலைஞர் சந்தீப் அட்வார்யுவுக்கு நிகராக எதையும் சுருக்கமாக சொல்லிவிட முடியவில்லை. இதோ, மல்யுத்த வீரர் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். வலதுசாரி மதவாத சக்திகள் வென்றனர். இந்தியா தோற்றது.  

உறக்கத்தில் நடக்கும் நோயால் நேரும் பின்விளைவுகள்! - பிளாக் - ஆதி சாய்குமார், தர்சனா பானிக்

படம்
               பிளாக் ஆதி, தர்சனா பானிக் ஆதியின் அப்பா ரோந்துப் பணியின்போது கார் மோதி இறந்துபோகிறார். அவரது கான்ஸ்டபிள் வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு அதாவது நாயகனுக்கு வழங்கப்படுகிறது. அந்த வேலையைச் செய்ய அவருக்கு பெரிய இஷ்டமில்லை. ஆனாலும் அப்பாவின் ஆசை என்பதற்காக வேலையில் சேருகிறார். இரண்டாவது நாளே கொள்ளை, அதற்கடுத்த நாளில் கொலை என அவர் ரோந்து செல்லும் பகுதியில் நடக்கிறது. இறந்துபோனவர்கள் குறிப்பிட ரௌடி கேங்கைச் சேர்ந்தவர்கள். அந்த தரப்பும் கொன்றவர் யார் என தேடுகிறார்கள். காவல்துறையும் தேடுகிறது. உண்மையான கொலைகாரன் யார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி. படத்திற்கு அடுத்த பாகம் எடுக்க கூட இயக்குநர் தயாராக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். நாயகனுக்கு தன் வேலையில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ரோந்து செல்லும் பகுதியில் கொள்ளை, கொலை நடந்ததால் அவரது மேலதிகாரி என்ன வேலை பார்க்கிறாய் என திட்டுகிறார். இதனால் சங்கடம் கொள்பவர், கொலையாளியைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இந்த மெனக்கெடல் அடுத்தடுத்த காட்சிகளில் தொடரவில்லை. ஒரு காட்சியில் இப்படி, அடுத்த காட்சிய...

கல்யாண வீடியோ தரத்தில் பழிக்குப்பழி கதை!

படம்
        ஜெய்ஶ்ரீராம் உதய்கிரண், ரேஷ்மா நேர்மையான இன்ஸ்பெக்டர் ஒருவரை அரசியல்வாதிகள், ரவுடிகள், போலீஸ் கமிஷனர் என அனைவரும் கூட்டாக ரவுண்ட் கட்டி அடித்து ஒரு இடத்தில் சிறைப்படுத்துகிறார்கள். அங்கிருந்து தப்புபவர், எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை. படம் பரிதாபமான தரத்தில் உள்ளது. ஏறத்தாழ கல்யாண வீடியோ என்றே கூறலாம். இதில் வரும் எடிட்டிங்கை விட தரமாக இன்று கல்யாண வீடியோவை எடிட் செய்கிறார்கள். உண்மையில் இது படமா, அல்லது டெலி ஃபிலிமா, சீரியலா என்று கூட பார்வையாளர்களுக்கு சந்தேகம் வரும். சன்டிவி சீரியலில் மையப் பாத்திரத்திற்கு அதிர்ச்சி ஆனால், அந்தக் காட்சி அப்படியே ஒருவரின் சட்டையைப் பிடித்து உலுக்கியது போல குலுங்கும் அல்லவா, அதே டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற கண்றாவியைப் பார்த்து  என்ன சொல்வது என்று தெரியாமல், உதய் கிரணின் ரசிகர்கள், அவர் இறந்துபோனதற்கு யார் காரணம், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றெல்லாம் பேசி கமெண்டில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். படத்தில் ஹரிஷ் கல்யாண் வில்லன்களில் ஒருவராக வருகிறார். அவர்தான் நாயகனின் அப்பா, தங...

எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!

படம்
 தி ஹைடன் ஃபாக்ஸ்  சீன திரைப்படம்  ஒன்றரை மணி நேரம் ஐக்யூயி ஆப் இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.  இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.  ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு  சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.  ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது....

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

படம்
  chimera k drama  16 episodes Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ...   Wikipedia கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம்.  1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார்.  35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று க...

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்...