வாசனை திரவியம் தயாரித்து பாலுறவுக்கு உந்தி காதல் மோசடி செய்யும் பெண்களை தண்டிக்கும் நாயகன்!
கம்மாத்து
தெலுங்கு
சுவாதி தீக்சித்
ஆங்கிலத்தில் வெளியான பர்ஃப்யூம் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதன் மலினமான தழுவல். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு கதை திரைக்கதை வசனம் என இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். கூச்சமே இல்லை.
ஒரு படத்தை தழுவி இன்னொரு படத்தை எடுப்பது முற்றாக தவறு இல்லை. ஆனால், மூலப்படத்தை கேவலப்படுத்தாத வகையில் எடுக்கலாம். அதைவிட மேம்படுத்தி எடுக்கலாம். இப்படி எந்த இரண்டு வகையில் வராத மாதிரி படத்தை கிண்டி வைத்திருக்கிறார் இயக்குநர்.
அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் என்றாலே மூக்கு கண்ணாடி போட்டிருக்கவேண்டும். முடியை வெட்டாமல் விடவேண்டும் என கிளிஷே அவதாரமாக நாயகன் பாத்திரம் உள்ளது. பள்ளியில், கல்லூரியில் நன்றாக நடிப்பவர். ஆபாச படத்தை நண்பர்களுடன் பார்த்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாக காம உணர்வை தூண்டவேண்டும் என லட்சியம் கொள்கிறார். முதுகலை படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் அபார்ட்மென்ட் வாடகை, சாப்பாடு, அவரது அருகிலுள்ள திரைப்பட உதவி இயக்குநருக்கான உணவு, மதுபான செலவு எல்லாம்.... அந்த பக்கத்து வீட்டு அண்ணன் பாத்திரம் கொஞ்சம் கூட பொருந்தவே இல்லை.
இதெல்லாம் தாண்டி நாயகனின் வீட்டுக்கு அரைகுறை ஆடையோடு மாராப்பு திறந்தே கிடக்கும் வேலைக்காரி வருகிறாள். நாயகன் புதிதாக கண்டுபிடிக்கும் வாசனை திரவியங்களை அவள்தான் முதலில் சோதித்து பார்ப்பாள். அவள் பொருட்களை துடைத்து வைக்கும் துணியில் கூட வாசனை திரவியத்தை தெளித்து வைக்கிறான் நாயகன். அது எதற்கு என்று தெரியவில்லை. அறிவியல் ஆராய்ச்சியாளன் என்றால் பெரும்பாலும் நாயகன் கர்ம யோகியாக உள்ளான். தான் எதிர்பாராமல் சந்தித்த பெண்ணை ஒருதலையாக காதலிக்கிறான். வாசனை திரவியத்தால் சுயநினைவை இழந்து காமப் பித்தால் நாயகனை கற்பழிக்க முயலும் வேலைக்காரி, அலுவலக தோழி என யாரையும் நாயகன் ஏற்பதில்லை. அபார்ட்மென்டில் உள்ள ஒரே ஒரு ஆன்டியை மட்டும் மொட்டைமாடியில் வைத்து காதல் தோல்வியில் கதகளி ஆடுகிறார். அதெப்படி மொட்டை மாடியில்.. புது விதமான ஃபெட்டிஷா என கேட்காதீர்கள். படத்தில் நிறைய காட்சிகள் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற ரீதியில்தான் இருக்கும்.
படத்தில் நாயகியை விட வீட்டு வேலைக்காரி பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அழகாக வடிவாக இருக்கிறார். நாயகி ஒருவித முட்டை வடிவத்தில் இருக்கிறார். அந்தப்பெண்ணுக்காக நாயகன், காமசுகம் அனுபவிக்காமல் விடுவதெல்லாம்... நாயகியை விட மற்ற பெண்கள் அழகாக இருக்கிறார்கள். அப்படியெல்லாம் வைத்திருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ,.. ஒருதலைக்காதல்தான்.. அதுவும் கூட இருபக்கம் கிடையாது. இதனால் கோபம் கொள்ளும் நாயகன், தன்னை காதலிக்கவில்லை என்ற வெளிப்படையாக கூறிய நாயகியை பழிவாங்க சென்ட் பாட்டிலோடு கிளம்புகிறான். அதற்கு அச்சாரமாக ஐந்து ஆண்டுகள் காதலித்து ஏமாற்றிய பெண்ணை நினைத்து அழும் காதலனுக்கு உடலில் காமவெறியை ஏற்படுத்தும் சென்ட்டை தெளித்து அனுப்புகிறான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆறு பேர் உட்காரும் காரில் இன்பக்களியாட்டம் செய்கிறார்கள். அதை பார்த்து நாயகன் வில்லத்தனமாக சிரிக்கிறான். வேட்டை தொடரும் என போட்டு படத்தை முடிக்கிறார்கள். என்ன வேட்டை, எப்போது தொடங்கியது என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழும்.
படத்தின் இயக்குநருக்கு எந்த கேள்வியும் எழவில்லை என்பதுதான் பெரிய சோகம். படத்தில் வீட்டு வேலைக்காரி பாத்திரத்தில் நடித்த நடிகை கூட நினைவுக்கு வருகிறார். ஆனால், நாயகி நினைவுக்கு வர மறுக்கிறார்.
நாயகனை அறிவியலாளன் என்று கூறுகிறார்கள். என்ன செய்கிறான். மனப்பாடம் செய்து பரிட்சை எழுதுகிறான். அதில் வெல்கிறான். அவ்வளவேதான். மற்றபடி புதிதாக ஏதாவது கண்டுபிடித்தானா, சமூகத்திற்கு ஏதாவது நன்மைகள் ஏற்பட்டதா என்றால் ஒன்றுமில்லை. வாசனை திரவியம் கண்டுபிடிக்கும் ஐடியாவை ஆபாச படத்தில் இருந்து எடுத்தது சாதனையா?
திரைப்பட உதவி இயக்குநராக உள்ள பக்கத்துவீட்டு அண்ணன், வாசனை திரவியம் விற்க வரும் பெண்ணின் உடலில் நாயகன் உருவாக்கிய வாசனை திரவியத்தை தெளிக்கிறார். பிறகுதான் அந்தப்பெண் காம வெறி ஏறி, அண்ணன் மேலேறி கன்னம் தடவி சட்டை பட்டனை கழற்றுகிறார். அண்ணன் அலறி உதவி கோருகிறார். அவர் வேலைக்கு போகாததால் மனைவி உடலுறவுக்கு அனுமதிப்பதில்லை. அப்படியும் அவர் ஏக பத்தினி விரதன். அவர் மீது கற்பழிப்பு புகார் கூறுகிறார்கள். அப்போதும் கூட அவருக்கு நாயகன் தயாரித்த வாசனை திரவியம் மீது சந்தேகம் வரவில்லை. ஏன் அப்படி நடந்துகொண்டாள் விற்பனைப்பெண் என விசாரிக்க மாட்டேன்கிறார்.
வேலைக்காரி பாத்திரம், பொருட்களை துடைத்து வைக்கும் துணி அருகே உள்ள வாசனை திரவியம் மாற்றப்படும்போது அதைப்பற்றி எதுவும் கூறமாட்டேன் என்று இருப்பது ஏன்?
கதை, காவல்நிலையத்தில் குந்தாணி போலீஸ்காரிக்கு நாயகன் பற்றிய கதையை கூறுவதாக படம் தொடங்குகிறது. அப்படியே நேர்கோட்டில் தொடங்கி நிறைவடைகிறது. பெரிய ட்விஸ்ட் ஒன்றும் கிடையாது. வாசனை திரவியம் தயாரிப்பிலும் ஆர்வம் ஊட்டும் ஏதும் காட்டப்படுவதில்லை. கதையை குற்ற சாகச படமாக மாற்ற நினைத்திருக்கிறார்கள். எடுபடவில்லை. நாயகனாக நடித்தவர் தோற்றம், நடிப்புக்கு இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
ஆண், சுய இன்பம் அனுபவிப்பது அவனுக்கு மட்டுமேயான இன்பம். பாலுறவு இருவரும் இன்பத்தை பகிர்ந்து கொள்வதாகிறது. இதில் நாயகன் பழிவாங்குவது எங்கிருந்து வருகிறது. பாலுறவு கொள்ளும்போது அந்த பெண்ணுக்கு சுயநினைவு இல்லாமல் போகிறது. அதுதான் பழிவாங்குவதா?
மோசமான நகல்
கோமாளிமேடை குழு




கருத்துகள்
கருத்துரையிடுக