சீன மினி டிராமாக்களில் உள்ள கிளிஷேக்கள்!

 


சீன மினி டிராமா


சீனர்கள் ஏராளமான மினி டிராமாக்களை தயாரித்து தள்ளுகின்றனர். அவை பெரும்பாலும் டிடி1 இல் வரும் டெலிபிலிம் தரத்தில் உள்ளன. டிராமா தலைப்பை சீனமொழியில் எழுதிவிடுகிறார்கள். இதனால் நாடக தலைப்பை குறிப்பிட முடியவில்லை. 


நிறைய வசனங்களை எழுதிவிடுகிறார்கள். அதை மானாவாரியாக பேசித் தள்ளுகிறார்கள். 


காமெடிக்கு நிகராக பல பெண்களை பெண்டாளும் ஆண் நாயகனாக இருக்கிறான். 


பெண் அரசியாக இருந்தாலும் அவளை நாயகன் காமக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறான். அவளை பெண் என்ற அடிப்படையில் பார்க்கிறான். மதிக்கிறான். அவளது அறிவுக்கு புத்திசாலித்தனத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. 


தொன்மை காலத்தில் நவீன அறிவியல் கருவிகள் வருவது போல ஏராளமான நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியான கதையில் எந்த லாஜிக்கும் கிடையாது. நீங்கள் ரிலாக்சாக காலை நீட்டிவிட்டு பார்க்கலாம். நல்லதே நடக்கும். நாயகனே ஜெயிப்பான். 


பெண் அரசன் அதாவது ஆண் என சொல்லி அரசாளுவாள். அதை நாம் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளும்போது அன்றைய கால அமைச்சர்கள் கண்டுபிடிக்க ஒன்றரை மணிநேரம் தேவைப்படுகிறது. பெண் திறமையாக இருந்து ஆட்சியை கைப்பற்றி ஆண்டாளும் கூட அவள் ஆணை அதாவது நாயகனை சார்ந்தே இயங்கவேண்டும். அதுதான் சீன நாடக விதி. பெண் பாத்திரங்களுக்கு ஒரே வேலை, ஆணோடு படுக்கையில் படுத்து உருள்வது அல்லது அவன் தோளில் சாய்ந்துகொள்வது...


நாயகனுக்கு, நாயகி சொல்லித்தான் அவனது தாய் அல்லது உறவு செய்யும் இழைக்கும் அநீதிகள் தெரியவருகின்றன. அதுவரை செக்குமாடு போல அவர்களுக்காக இழிவுகளை தாங்கிக்கொண்டு உழைப்பான். 



நிறைய பெண்களை கதையில் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதானே... நாயகனுக்கு நோய் இருக்கிறது. மாங்கா மச்சம் கொண்ட ஏழு பெண்களோடு அவன் பாலுறவு கொண்டால்தான் உயிர் பிழைப்பான். அவ்வளவுதான் சீனாவில் சுந்தர் சி ரக படம் ரெடி.. திகட்ட திகட்ட காம படையல்...



நாயகன் மறுபிறப்பெடுத்து எனுச் எனும் அதிகாரியாக இருக்கிறான். அவனை அரசி விரும்புகிறாள். அவனை அரசியின் பாதுகாவலர், இன்னொரு இளவரசி, உறவுக்காரப்பெண், வேற்றுநாட்டு தூதர் என பலர் விரும்புகிறார்கள், பாலுறவு கொள்கிறார்கள். நாயகன் விரும்பித்தான் உடன்படுகிறான். அப்போதும் அரசி, அதே டெய்லர்  அதே சட்டை கணக்காக நாயகனை திருமணம் செய்கிறாள். எதற்காக? ஆண்மையின் பெருமைக்காகவா? 



சீன டிராமாக்கள் ஒரு மணி நேரம், இரண்டுமணிநேரம், மூன்று மணிநேரம் வரை நீள்கின்றன. 


தொன்மைக்காலத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 6, ஏகே 47, கையெறிகுண்டு, பசூக்கா லாஞ்சர் என நவீன ஆயுதங்கள் உள்ளே வரும்போது காரண காரியங்கள் அனைத்தும் வெளியே போய்விடுகின்றன. அப்புறம் கதைபாட்டுக்கு கதாபாத்திரம் தன் பாட்டுக்கு என நகரவேண்டியதுதான்.....


தொன்மைக்காலத்தில் நவீன உணவு, ஆயுதங்கள், வெடிமருந்து என்று மட்டும் டஜன் கணக்கில் டிராமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான சவால், இழிவுபடுத்தல், உருவக்கேலி வசனங்கள் உண்டு. 


சீன டிராமாக்களில் ஆங்கில டப்பிங் வேறு உண்டு. அதை கண்டால் உங்களுக்கு வாழ்க்கை மீதே விரக்தி வந்துவிடும். தெலுங்கு படங்களுக்கு தமிழில் இஷ்டத்தில் வசனம் எழுதுவார்களே... அதே இயல்பில் உள்ளது. 


அதீத நாடகத்தனம், அனிமேஷன் பட ஒலிகள் என ஷார்ட் டிராமாக்கள் அதற்கான தனி உலகைக் கொண்டிருக்கின்றன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!