காப்புரிமையால் நீக்கப்பட்ட பதிவு மீண்டும் பதிவேற்றம் - மங்கா காமிக்ஸ் விமர்சனத்திற்கு வந்த சோதனை!
அல்டிமேட் சோல்ஜர் என்ற மங்கா காமிக்ஸை படித்துவிட்டு அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை கோமாளிமேடையில் பதிவிட்டிருந்தோம். விமர்சனம்தான். அதற்கே வி்ஷ் மீடியா நிறுவனத்தின் எரிக் க்ரீன் என்பவர் புகார் கொடுத்து காப்புரிமை விதி மீறல் என அறிவித்துவிட்டார். அவரது நிறுவனத்தின் காமிக்ஸை பலரும் பிரதி எடுத்து வெவ்வேறு தளங்களில் வெளியிடுகிறார்கள். அதை தடுப்பது அவர்களது நிறுவனத்தின் வேலை. இதில் காமிக்ஸை படித்துவிட்டு அது எங்கே கிடைக்கும் என இணைய லிங்கை பரிந்துரைத்தது காப்புரிமை புகாருக்கு உட்பட்டிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை என்ற பெயரில் பலரையும் மிரட்டி வருகிறார்கள். அனி என்ற செய்தி நிறுவனம் கூட யூட்யூபர்களை மிரட்டி சேனல்களை மூட போலியான புகார்களை அனுப்பி வருவதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள்.
கோமாளிமேடையின் பதிவு, இணைய லிங்க் இல்லாமல் மீண்டும் பதிவிடப்படுகிறது. தனிநபர்கள் பங்களிப்புடன் வெற்றி பெற்ற பிளாக்கர் நிறுவனம், இப்போது உலகிலுள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கிவிட்டது என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற நிறைய செய்திகளை பார்ப்போம் என நம்புகிறேன். உண்மையை எதிர்கொள்ள முடியாத மனம் புண்பட்ட ஆன்மாக்கள் நிறைய பேர் உலகம் முழுக்க வாழ்கிறார்கள் அல்லவா?

கருத்துகள்
கருத்துரையிடுக