இடுகைகள்

31.5 டிகிரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருபது ஆண்டுகள் கிரையோஜெனிக் கேப்சூலில் வைக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்து வந்தால்... மெல்டிங் மீ சாஃப்ட்லி

படம்
  31.5 டிகிரி தாண்டினால் ஆபத்து  மெல்டிங் மீ சாஃப்ட்லி - கே டிராமா மெல்டிங் மீ சாஃப்ட்லி கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   டிபிஓ என்ற டிவி சேனலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிப் பிரிவில் மா டோங் சான் என்ற இளைஞர் வேலை செய்கிறார். புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். இவர் கிரையோஜெனிக் மூலம் தன்னை 24 மணிநேரம் உறைய வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார். அதை டிவியில் ஒளிபரப்புவதுதான் பிளான்.   இவருடன் ஓ மிரான் என்ற இளம்பெண்ணும் காசு கிடைக்குமென பரிசோதனைக்கு சம்மதிக்கிறாரர். ஆனால், இந்த சோதனை துரதிர்ஷ்டவசமாக 20 ஆண்டுகள் வரை நீண்டுவிடுகிற்றது. 1999 தொடங்கி 2019இல் தான் இருவரும் கண் விழிக்கிறார்கள். டிவி தொடர் அவர்களது வாழ்க்கை, கொடுத்த வாக்குறுதி, குடும்பத்தினரின நிலை என பல்வேறு விஷயங்களை உணர்வுப்பூர்வமாக பேசுகிறது. கிரையோஜெனிக் அறிவியல் சோதனை, அதை முடக்கும் சர்வதேச சதிகள் என கதை சென்று சற்று ஆவலை ஏற்படுத்துகிறது. ஆனால், கதை திடீரென யூ டர்ன் போட்டு திரும்பி காதல் என்ற பைபாஸ் சாலைக்கு மாறி தேங்கி விடுகிறது. அதிலும், எந்தளவு ஆழமாக இருக்கிறது என்று ப