இடுகைகள்

நக்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

படம்
  சர்தா புல்லோடு  வெங்கடேஷ் , நக்மா, சங்கவி  தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை.  மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது.  தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை.  கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிற

தனது காதலியைக் கொன்ற தேசவிரோத கூட்டத்தை ஒழிக்கும் சுமார் போலீஸ் - சூப்பர் போலீஸ் - வெங்கடேஷ், நக்மா

படம்
  சூப்பர் போலீஸ்  வெங்கடேஷ், சௌந்தர்யா, நக்மா தேசவிரோதிகளை சப் இன்ஸ்பெக்டர் எப்படி பிடிக்கிறார், தனது காதலி பாரதி கொலைக்கு காரணமான சக்திகளை அழிப்பது எப்படி என கதை சொல்லுகிறது.  அப்பண்ணா என்ற தொழிலதிபர் இருக்கிறார். அவர் உள்துறை அமைச்சரோடு சேர்ந்து பாக் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வேலைகளை செய்துகொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரது மகள் ஏழை ஒருவரை காதலிக்கிறாள். இதற்கு உதவி செய்வதன் வழியாக வெங்கடேஷ், அப்பண்ணாவின் உலகில் உள்ளே வருகிறார். அப்பண்ணா, வெங்கடேஷ் தங்கியுள்ள வீட்டு உரிமையாளரான பத்திரிகையாளரை மதுபான புட்டியில் குண்டு வைத்து கொல்கிறார். அது வெங்கடேஷூக்கு வைத்ததுதான். ஆனால் தவறி பத்திரிகையாளர் இறந்துபோகிறார். இதனால் கோபம் கொள்ளும் வெங்கடேஷ் அப்பண்ணாவைக் கொல்ல சபதம் எடுக்கிறார். ஆனால் அதிகார சக்திகளுடன் மோதி தனது வேலையை இழக்கிறார். அப்பண்ணா நாயகனது காலை முறித்துப்போடுகிறார். இதிலிருந்து மீண்டு வரும்போது தனது முன்னாள் காதலி பாரதி காரில் அடிபட்டு இறந்துபோனதற்கு அப்பண்ணா காரணம் என அறிகிறார். பிறகு எப்படி பழிவாங்கினார் என்பதே கதை.  படத்தில் நாயகன் இறந்துபோவதே யதார்த்த படமாக இருக்கும். ஆனா