இடுகைகள்

ராகுல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரதமர் மோடி பேசினால் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் பேசினால் தவறா? - கரண் தாப்பர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்

படம்
  கரண் தாப்பர் எழுதிய நூல் சவுண்ட் அண்ட் ஃப்யூரி பத்திரிகையாளர் கரண் தாப்பர்  இந்தியாவின் முக்கியமான செய்தியாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நேர்காணல் மூலம் புகழ்பெற்றவர், கரண் தாப்பர். டிவியில் இவர் நேர்காணல் செய்யும் ஆளுமைகள் பீதி ஏற்பட்டு ஓடும் அளவுக்கு சர்ச்சையான படி கேள்விகளை அடுக்குவார். இப்படி எடுத்த இருபத்தியொரு நேர்காணல்களை சவுண்ட் அண்ட் ஃப்யூரி என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம். ஆக்ரோஷமாக கேள்விகளைக் கேட்டு பிரபலங்களை தடுமாறச்செய்யும் நேர்காணல் முறையில் நீங்கள் பிரபலமானவர். இந்தியாவில் இந்த முறை மெல்ல அழிந்து வருகிறதா? இப்போதைய இந்திய சூழ்நிலையில் நீங்கள் கூறியபடி,   ஆக்ரோஷமான கேள்விகளை கேட்கும் முறை அழிந்துதான் வருகிறது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை இப்படியில்லை. அன்று, டிவி சேனல்கள் அரசியல்வாதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து பேசின. கடுமையான கேள்விகளைக் கேட்டன. இன்று அரசியல்வாதிகள் டிவி சேனல்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு ஏற்றபடி கேள்விகளை கேட்க வைக்கின்றனர். பிரதமரிடம் கேள்வி கேட்கும் செய்தியாளரின் கேள்விகளைப் பா

காங்கிரஸ் கட்சி அரசு ஆளும் மாநிலங்களில் கோவிட் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் - சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்

படம்
            சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் செயல்பாடு தற்போது எப்படியுள்ளது . உங்களது மருமகன் கூட கோவிட் பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளார் அல்லவா ? ராகுலின் செயல்பாடு மேம்பட்டுள்ளது . டாக்டர் மன்மோகன் உட்பட பலரும் பாதிக்கப்பட்டது எனக்கு கவலை அளித்தது உண்மைதான் . மக்கள் இந்நோயினை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் . மோசமான காலகட்டத்தை நாம் இம்முறையில்தான் கடக்க முடியும் . மத்திய அரசு நோய்தடுப்பிற்காக காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளை கேட்டால் அதனை ஏற்பீர்களா ? நிச்சயமாக . எனது பதில் ஆமாம் என்றுதான் இருக்கும் . அந்த காரணத்தினால்தான் நாங்கள் பிரதமருக்கு கோவிட் பிரச்னையை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தோம் . காங்கிரஸ் கட்சி பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல்லாண்டுகள் அனுபவம் கொண்டது . இப்போதுள்ள நிலையில் அரசுக்கு நீங்கள் கூறவேண்டிய அறிவுறுத்தல்கள் என்ன ? இந்தியா தினசரி 7500 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறது . ஆனால் இன்று தன்னுடைய மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை தரமுடியவில்லை . எங

அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்

படம்
              ஜாதி ரத்னாலு  Director: Anudeep KV Produced by: Nag Ashwin Writer(s): Anudeep KV     ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.  ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.    ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க  ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன். அவன் நினைப்பு எப்போதுமே சோறு, அதற்கு குழம்பு, கூட்டு, பொரியல் என்ன வ

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர் யார்?

படம்
                  அடுத்த தலைவர் ? காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது . உட்கட்சியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த சூழ்நிலை காட்டுகிறது . சோனியா காந்தி உடல்நிலை சிக்கலால் அவதிப்பட , அடுத்த முழுநேர தலைவர் யார் என்று பலரும் அவரா இவரா என யோசித்து வருகின்றனர் . வாய்ப்புள்ள சிலரை பார்ப்போம் . பவன் பன்சால் இடைக்கால நிர்வாகி , பொருளாளர் . தலைவராக வாய்ப்புள்ளவர் . எளிமையான மனிதர் . அதுவேதான் பலவீனமும் கூட . அனைவரையும் இணைக்கும் திறமை போதாது . திக்விஜய் சிங் மேலவை உறுப்பினர் , காங்கிரஸ் கமிட்டி அழைப்பாளர் மூத்த தலைவர் . மூத்த அரசியல்வாதி என்பதால் இளைஞர்களால் ஏற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது . ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை தலைவர் , மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மேற்கு வங்க அரசியலில் வேர்பிடித்து வளர்ந்து வந்தவர் . மற்ற அரசியல் சமாச்சாரங்களை அதிகம் அறிந்தவர் அல்ல . முகுல் வாஸ்னிக் சோனியாகாந்திக்கு நெருக்கமான ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . மத்திய

இந்திய தேர்தல் 2019: கறுப்பு பணத்தை ஒழிப்பது எப்படி?

படம்
இநியூஸ்ரூம்/கறுப்பு பணம் தேர்தலில் கறுப்பு பணம்! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போதும், இடைத்தேர்தலின் போதும் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது என்ற புகாரை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விவகாரத்தில் தொழில்நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்கு உள்ளது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. ஆனாலும் இதன் மீது அரசு பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இவ்வகையில் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் தேவை என்று கூறின. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் பத்திரங்களையே வெளியிட்டு கல்லா கட்டிவிட்டது. இதில் முதலீடு செய்பவர்கள் யார் என்ற விவரங்கள் வெளிப்படையாக பேசப்படாமல் உள்ளது இதனை தீவிரமான பிரச்னையாக்குகிறது.. இன்று கட்சிகள் பெறும் 70 சதவீத பணம் யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் வந்து சேருகிற பணம். ஆனால் இந்த பணம் எங்கிருந்து வருகிறது என சட்டத்திற்கு தெரியாவிட்டாலும், மக்களுக்கு ஏறத்தாழ தெரிந்துவிட்டது போலத்தான். ஆனால் அரசு வெளிப்படையாக ஊழலை ஒழிப்போம் என்று கூறினாலும் அதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அதற்கு என்ன