நாய் போல ஒடுங்கி வாழும் இளைஞன் வீர தீர சூரனாகி வாள் எடுக்கும் கதை!
சோல் ஆஃப் பிளேட்ஸ் சீன திரைப்படம் ஐக்யூயி ஆப் நாம்கூங் என்ற குடும்பம் வாள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரும்பாடுபட்டு வாள் ஒன்றைச் செய்கிறார். ஆனால் அப்படி செய்யும்போது மனதில் உருவாகும் ஆசை,வாளில் தீய ஆன்மாகவாக மாறுகிறது. எனவே, அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து புகழ்பெற்ற வாள்வீரர், அதை திருடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு அந்த வாளை வைத்து நிறைய விஷயங்களை சாதிக்க ஆசை. உண்மையில் அந்த வாளைத் தேடி ஏராளமானவர்கள் சுற்றி வருகிறார்கள். அந்த வாள் யாருக்கு கிடைத்தது என்பதே கதையின் இறுதிப்பகுதி. படத்தில் நாயகனுக்கு பெயரே நாய்தான். மிஸ்டர் நாய் என அழைத்து தூற்றுகிறார்கள். அவனது இளமைக்காலம் கொடுமைகள் நிறைந்தது. ஒரு துண்டு இறைச்சிக்காக நாயுடன் சண்டையிட்டு வாழ்கிறான். அப்படியே வாழ்ந்து கோழைத்தனமும், உயிரைக் காப்பாற்றி்க்கொள்ளும் சாதுரியமும் வருகிறது. ஆனால் வீரம், தைரியம், நேர்மை வரவில்லை. இதை அவன் மெல்ல கற்றுக்கொண்டு வாளை எப்படி கையில் எடுத்து வாளின் ஆன்மா இருந்தாலும் இல்லையென்றாலும் வீரனாக இருக்கிறான் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்....