இடுகைகள்

வினோதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே... உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள்.  பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

2023 - மனிதர்கள் - சம்பவங்கள் - கார்டியன் நாளிதழ்

படம்
  2023 - மனிதர்கள், சம்பவங்கள்  பிரேம் குப்தா, தனது மகளை வழக்கம் போல திருமணம் செய்துகொடுத்தார். மருமகன் வழக்கம்போல, காசுக்கு ஆசைப்பட்டு மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்த தொடங்கினார். மகள் இதைப்பற்றி அவளது அப்பாவிடம் கூறினாள். பிரேம் குப்தா என்ன முடிவெடுத்திருப்பார். பெரும்பாலான இந்தியர்கள், அடித்தாலும் உதைத்தாலும் அனுசரித்துப் போ, குடு்ம்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்றுதான் கூறுவார்கள். பெண்களை பெரும்பாலான இந்தியப் பெற்றோர் சுமையாகவே நினைக்கிறார்கள். ஆனால், பிரேம் குப்தா வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் இங்கு அவரைப் பற்றி பேச வைக்கிறது. மருமகனின் வீட்டுக்கு பேண்டு, மேளம், டிரம்பெட்டுடன் சென்று மகளை எப்படி கல்யாணம் செய்துகொடுக்கும்போது கொண்டாட்டமாக அனுப்பி வைத்தாரோ அதேபோல தாளமேளத்துடன் கூட்டி வந்துவிட்டார். உண்மையில் அவரை சுற்றி இருப்பவர்கள், திட்டியிருப்பார்கள். பணம் கொடுத்து மகளை வாழ வை என்று கூட கூறியிருப்பார்கள். ஆனால் பிரேம் குப்தா தனது மகளின் மனநிம்மதியை, பாதுகாப்பை முக்கியமாக நினைத்திருக்கிறார். வாயில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்றாலும் தனது மகளை கௌரவத்தோடு வா

வித்தியாசமாக கட்டப்பட்ட டோக்கியோ கேப்சூல் டவர்!

படம்
  வினோதமான டோக்கியோ டவர் கட்டடம்! இந்த கட்டடத்தை முதலில் பார்ப்பவர்கள், தேவையில்லாமல் இருக்கும் கான்க்ரீட் கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள் என்றே நினைப்பார்கள். கின்சா மாவட்டத்திலுள்ள டோக்கியோவில்  கேப்சூல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை  1972ஆம் ஆண்டு கிஷோ குரோகாவா என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் உருவாக்கினார். நகரில் வேலை பார்ப்பவர்கள் வார இறுதிக்கு புறநகருக்கு அவசரமாக கிளம்புவதைத் தடுக்கும் வகையில் இந்த கட்டட அமைப்பை உருவாக்கினார். பார்க்க பெட்டி மாதிரி இருந்தாலும் இதில் பலர் தங்கலாம். ஒரு பெட்டியில் ஒருவர் என தங்கலாம். உலகப்போருக்கு கட்டப்பட்ட கட்டுமானது இது. ஒவ்வொரு கேப்சூலிலும் குளியலறை, டிவி, ரேடி, போன் ஆகியவை வைப்பதற்கான இடம் இருக்கும். கூடவே நகரை உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்கான ஜன்னலும் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கேப்சூல் கட்டுமானம் மெல்ல சிதைவடைந்து வருகிறது.  இப்போது இங்கே தங்கி கேப்சூலை அலுவலகமாக வீடாக பயன்படுத்தி வருபவர்களுக்கும் நிலைமை புரிந்துவிட்டது. அடுத்த ஆண்டு இந்த கேப்சூல்கள் அழிக்கப்படும் என தெரிகிறது. ”நாங்கள் இந்த கட்டட ஐடியா

உலகிலுள்ள வினோதமான காடுகள்- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

படம்
  ஆவோகிகாகரா, ஜப்பான் வினோதமான காடுகள் விஸ்ட்மேன்ஸ் வுட் இங்கிலாந்து டர்ட்மூர் தேசியப்பூங்காவின் ஒருபகுதியாக விஸ்ட்மேன்ஸ் வுட் காடு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இந்தக் காடு அமைந்துள்ளது. உயரமாக ஓக் மரங்களின் கிளைகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பதே கடினமாக இருக்கும். பேய், பூதம், பிசாசு இருக்கும் என்றாலும் நம்பியே ஆகவேண்டிய அனைத்து செட்டப்புகளும் இக்காட்டில் உண்டு.  தி ஸ்வார்ஸ்வால்ட் ஜெர்மனி இதனை கருப்புக்காடு என்று சொல்லுகிறார்கள். பிரதர்ஸ் கிரிம்ப் போன்றோர் இக்காடு பற்றி ஏராளமான கதைகளை எழுதியுள்ளனர். ஓநாய் இருக்குமாம், சூனியக்காரிகள் இருப்பார்களாம், தீய சக்திகள் குடியிருக்கும் காடாம் என அரண்மனை 4, 5 எடுக்கும் அளவுக்கு சமாச்சாரங்கள் உள்ளன. இக்காட்டிற்குள் நுழையும் சிறுவர்கள், அவர்களின் பாவக்கணக்கிற்கு ஏற்ப தண்டிக்கும் அரக்க மனிதனும் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். இக்காட்டிற்குள் உள்ளே போனவர்கள் திரும்ப வெளியே வரமுடியாது எனவும் கதை கட்டி வருகிறார்கள்.  தி ஹோயா பசியு காடு ரோமானியா வடமேற்கு ரோமானியாவில் அமைந்துள்ள காடு. இதனை ரோமானியாவின் பெர்முடா டிர

விலங்குகளும் அதன் கணக்கிடும் திறன்களும்!

படம்
            விலங்குகளும் அவற்றின் திறன்களும் சிங்கம் தனக்கென கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதில் சிறப்பு பெற்றவை . ஆனால் அதன் எண்ணிக்கை கூடாமல் இருப்பது அதன் பலம் . ஒற்றுமையாக இருப்பதால் , எளிதாக இரையை வேட்டையாட முடியும் . கூடவே தனது எல்லையை எளிதாக பாதுகாக்க முடியும் . ஒரு தனி சிங்கம் 259 சதுர கிலோமீட்டர் தூரத்தை தனது கோட்டையாக பாவித்து காப்பாற்றி வாழும் . இதன் எல்லை மாறிக்கொண்டே இருக்கும் . கூட்டமாக இருப்பதால் பிற சிங்க கூட்டத்தின் தாக்குதலை எளிதாக சமாளிக்க முடியும் . மேலும் சண்டையில் பிற எதிரி கூட்டங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு தாக்குதலை நடத்துகிறது . ராணித்தேனீயை மையமாக கொண்ட தேனீக்களின் காலனி எப்போதும் ஆச்சரியப்படுத்துகிற செய்திதான் . நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும் , ஆயிரக்கணக்கான பெண் தேனீக்களும் வாழ்வதற்காக கடுமையாக உழைக்கின்றன . இவை பிற தேனீக்களுடன் தொடர்புகொள்ள குறிப்பிட்ட திசை நோக்கி நடனம் ஆடுகின்றன . குறிப்பிட்ட திசை நோக்கி பறக்கின்றன . இப்படி பறக்கும் விதத்தில் பூக்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்ற தகவலையும் வெளிப்படுத்துகின்

ஏழுமுறை மின்னலால் தாக்கப்பட்ட அமெரிக்கர்! - மின்னல் செய்திகள்

படம்
cc புயலைத் தடுக்க வாய்ப்புள்ளதா? இயற்கையின் எந்த நிகழ்வுகளையும் மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இன்றுவரை முயன்று வருகிறார்கள். பஞ்சம் தலைதூக்கியுள்ள பகுதிகளில் மழை வர வைக்க முயல்கிறார்களே,.. அது இந்த ரகத்தில் சேரும். இம்முறையில் கார்பன் டை ஆக்சைடு, சில்வர் அயோடைடு, கால்சியம் குளோரைடு ஆகியவற்றை மேகத்தின் மீது தூவி மழையை பொழியச்செய்கின்றனர். சிலசமயங்களில் இம்முயற்சி பெரு மழையைத் தடுக்ககவும் பயன்படுகிறது. உலகில் மின்னல் தாக்குதல் அதிகம் எங்கு நடந்துள்ளது? ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கிஃபுகா என்ற ஊரில் மட்டும் ஆண்டுக்கு 150 மின்னல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ராய் சுலிவன் ஏழுமுறை மின்னலால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். இவர் வாழும் வர்ஜீனியா மாநிலம் அதிகளவு மின்னல்தாக்குதல்களை பெற்றுள்ளது. சுலிவன் பெரும்பாலும் மலையோரங்களில் தனது வேலைகளைச் செய்துவருவதால் மின்னல் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளார். புயலை முன்னமே அறிய முடியுமா? கடினம்தான். ஆனால் செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் ஓரளவு கணித்து யூகிக்கலாம். மின்னல் உருவாகும்போது, காற்று 30 ஆயிரம் ட

வித்தியாசமான போபியாக்கள்! - பயம்தான் பிரதானம்

படம்
பாபாபோபியா இது கத்தோலிக்க மத தலைவரான போப்பை பார்த்தால் வரும் பயம். பெண்களுக்கு வருமா? ஆண்களுக்கு வருமா என்று தெரியவில்லை.  சோசெராபோபியா பெற்றோரைப் பெற்றவர்களைப் பார்த்து வரும் பயம். தாத்தா, பாட்டியைப் பார்த்து வரும் பயம் என்றால் ஈசியாக புரியும் என நினைக்கிறேன்.  சோம்னிபோபியா தூங்கிவிடுவோமோ என நினைத்து பயப்படுவது. அனிமேஷன் படிப்பவர்களுக்கு வரும் வியாதி இதுதான் என இப்போது தெரிகிறது.  சாந்தோபோபியோ நிறங்களைப் பார்த்து மனதில் ஏற்படும் குலை நடுக்கத்தை இப்படி சொல்கிறார்கள்.  ஆம்பலோபோபியா சென்டர் ஆப் தி அட்ராக்சனைப் பார்த்து வருவது. அதுதாங்க, தொப்புளைப் பார்த்து வருவது.  ஹீலியோபோபியா சூரியன், வெளிச்சம், எல்இடி பல்புகளை பார்த்து ஒருவர் ஜகாவாங்கினால் அவருக்கு இந்தப் பிரச்னை என புரிந்துகொள்ளலாம்.  அராய்ச்சி புட்டிரோ போபியா பீநட் பட்டர் சாப்பிடும்போது வாயின் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளுமோ என பயப்படும் பழக்கம். நம்மூரில் இதனை பிரெட்டும் ஜாமும் என்று கூட மாட்டிக்கொள்ளலாம். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது அப்படியே அள்ளித் தின்னும

வினோத ஆராய்ச்சிகள்! - படித்து ரசியுங்கள்!

படம்
வினோத ஆராய்ச்சிகள்! புற்றுநோய், தைராய்டு என பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்தாலும், இப்படியெல்லாமா ஆராய்ச்சி என நாம் வியக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றில் சில ... பெயரைச் சொன்னால் எக்ஸ்ட்ரா பால்! இங்கிலாந்தில் நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கேத்தரின் டக்ளஸ் மற்றும் பீட்டர் ரௌலின்சன் ஆகியோர் பசுக்களின் பாலை அதிகரிக்க முயற்சித்தனர்.  பத்து மாதங்களில் 7,500 லிட்டர் பாலை பசுக்கள் தந்தது என்றால், இவர்களின் ஆராய்ச்சி மூலமாக 260 லிட்டர்கள் அதிகரித்தன. இதற்கு காரணம், பசுக்களுக்கு பெயர் வைத்து அழைத்ததுதான் என்று சொல்லி, அனைவரையும் அசர வைத்தனர்.  கூட்டமாக மேய்ந்தால் பசுக்களின் பால் அளவு குறையும் என்று சொன்ன ஆய்வு முடிவுகளைப் பார்த்து பசுக்களே சிரித்துவிட்டன. இரவு விழித்திருந்தால்... ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஜோனாசன் புதுமையான ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதிகாலையில் எழுபவர்கள், இரவு தூங்காமல் ஆந்தை போல வாழ்பவர்கள் ஆகியோரின் குணநலன்களை ஆராய்ந்தார். இதில் இரவு தூங்காதவர்கள், சமூகத்திற்கு

காமெடி திருடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

படம்
காமெடி திருடர்கள்! உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதைத் திருடிக் கொள்ளையடித்து சென்று சோக்காளியாக வாழ்வது. திருடர்களின் அசகாயர்களும் உண்டு, அசடுகளும் உண்டு. அதில் சிலர்... கேட்காத காது! ஜெர்மனியில் நடந்த திருட்டுக் கதை இது. பெர்லினில் உள்ள வங்கியில் நுழைந்த திருடர் துப்பாக்கியைக் காட்டி பணத்தை பேக்கில் நிறைக்கச் சொன்னார். கேஷியரும் வியர்த்து வழிந்தபடி,  பணத்தை பேக்கில் போட்டார். அப்போது பேக் நிரம்ப, இன்னொரு பேக் வேண்டுமா என ஊழியர் கேட்டார். அதற்கு, அத்திருடர், கையில் வைத்திருக்குக்கும் துப்பாக்கி ஒரிஜினல்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார். காது டமாராமா? என புன்னகைத்தவர் உடனே போலீசை அழைக்கும் அலாரத்தை ஒலிக்கவிட, திருடர் மாட்டிக்கொண்டார். இலவச வலை! இங்கிலாந்தின் டெர்பிஷையரில் இருந்த சிலருக்கு தபாலில் வந்த கடிதம் ஆச்சரியமளித்தது. அவர்கள் போட்டியில் வென்றுள்ளதாகவும், அதற்குப் பரிசாக பீர் வழங்கப்படும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் உச்சி குளிர்ந்து போயினர். சொன்ன இடத்திற்கு வந்தவர்களை போலீஸ் லத்தியில் முட்டிக்கு முட்டி தட்டி கெட்டியாய் காரில் ஏற்றி