2023 - மனிதர்கள் - சம்பவங்கள் - கார்டியன் நாளிதழ்

 









2023 - மனிதர்கள், சம்பவங்கள் 


பிரேம் குப்தா, தனது மகளை வழக்கம் போல திருமணம் செய்துகொடுத்தார். மருமகன் வழக்கம்போல, காசுக்கு ஆசைப்பட்டு மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்த தொடங்கினார். மகள் இதைப்பற்றி அவளது அப்பாவிடம் கூறினாள். பிரேம் குப்தா என்ன முடிவெடுத்திருப்பார். பெரும்பாலான இந்தியர்கள், அடித்தாலும் உதைத்தாலும் அனுசரித்துப் போ, குடு்ம்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்றுதான் கூறுவார்கள். பெண்களை பெரும்பாலான இந்தியப் பெற்றோர் சுமையாகவே நினைக்கிறார்கள். ஆனால், பிரேம் குப்தா வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் இங்கு அவரைப் பற்றி பேச வைக்கிறது. மருமகனின் வீட்டுக்கு பேண்டு, மேளம், டிரம்பெட்டுடன் சென்று மகளை எப்படி கல்யாணம் செய்துகொடுக்கும்போது கொண்டாட்டமாக அனுப்பி வைத்தாரோ அதேபோல தாளமேளத்துடன் கூட்டி வந்துவிட்டார். உண்மையில் அவரை சுற்றி இருப்பவர்கள், திட்டியிருப்பார்கள். பணம் கொடுத்து மகளை வாழ வை என்று கூட கூறியிருப்பார்கள். ஆனால் பிரேம் குப்தா தனது மகளின் மனநிம்மதியை, பாதுகாப்பை முக்கியமாக நினைத்திருக்கிறார். வாயில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்றாலும் தனது மகளை கௌரவத்தோடு வாழ வைக்க நினைத்தது பாராட்டப்படவேண்டியவேண்டும். பிரேம் குப்தா, செங்கற்களை செய்து விற்கும் தொழிலை செய்து வருகிறார். 


பெண்களை அடகுப்பொருளாக சுமையாக நினைக்கும் இந்திய சமூகத்தில் இது ஒரு பெரிய விஷயம்தான்.

அம்ரித் தில்லன்  


2


போதை வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தடவியல் வல்லுநர்



பிலிப்பைன்சில் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே ஆட்சிக் காலத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நாடெங்கும் தீவிர நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக போதைப்பொருள் மாஃபியாக்களை விட பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவி செய்து வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் ராக்குயில் ஃபார்டுன். பிலிப்பைன்சில் உள்ள இரண்டு தடவியல் வல்லுநர்களில் ஒருவர் ராக்குயில். 


பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டன. படுகொலையான இவர்களின் இறப்பு சான்றிதழில் கூட நிம்மோனியா, செப்சிஸ்தான் மரணத்திற்கு காரணம் தவறாக காரணம் கூறப்பட்டிருப்பதை ராக்குயில் கண்டுபிடித்து வெளியே சொன்னார். 12 ஆயிரம் தொடங்கி 30 ஆயிரம் பேர், முன்னாள் அதிபரால் போதைப்பொருள் வேட்டையில் கொல்லப்பட்டனர். இதுபற்றிய வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. 


அரசியல் தொடர்பான வழக்கு என்பதால் ராக்குயில் மீதும் நிறைய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதைப் பற்றியும் அவர் மறைக்காமல் வெளிப்படையாக பேசியதுதான் ஆச்சரியம். 


ரெபெக்கா ரெட்கிளிஃப்

3


சூடானைச் சேர்ந்தவர் இனாஸ் முசாமல். மக்களின் அடிப்படை உரிமை, ஜனநாயகம் ஆகியவற்றுக்காக போராடி வருகிறார். ராணுவப் படைகளால் பெண்கள் வல்லுறவு செய்யப்படுவது அங்கு வழக்கமான ஒன்று. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுறுவதை தடுத்து, கூடவே எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை தடுக்கும் மருந்துகளை வழங்கி வருகிறார். சர்வதேச நிவாரண அமைப்புகள் வழங்கும் மருந்துகள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. அவற்றை விநியோகிக்க கூட ஆட்கள் இல்லாத நிலை. 


இந்த மருந்துகளை இனாஸ் தனது நண்பர்கள் மூலம் பெற்று தேவைப்பட்டவர்களுக்கு வழங்க முயன்று வருகிறார். மக்களுக்கு உதவினாலே மனநிம்மதி போய்விடும் என்பது உண்மைதானே., அந்த வகையில் இனாசு்ம கூட தனது வீட்டில் வாழ முடியாத நிலையை அரசியல் சூழல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவி வருகிறார். 


ஜூலி போர்டின்


4


இனப்படுகொலை என்பது உலக நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடந்துகொண்டே இருக்கிறது. அடிப்படைவாத மதம் ஆட்சி செய்யும் நாடுகளில் இதை பகிரங்கமாக செய்கிறார்கள். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான போலிச்செய்திகளை பரப்பி அதன் வழியாக அம்மக்களை கொல்வதற்கான சூழலை உருவாக்குகின்றனர். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை வளர்ந்த நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீனத்தை ஆதரிப்பவர்களை செல்வாக்கு பெற்ற நாடுகள் அதட்டி மிரட்டுகின்றன. பணிய வைக்க முயல்கின்றன. இந்த கறைபட்ட அசிங்கமான அரசியல் தாண்டி சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படுகின்றன. 


ஜெர்மனியில் பிரேக் டான்ஸ் ஆடி தொழில்வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பாலஸ்தீனியர் அஹ்மத் அல்காரிஸ். இவர் அங்கு போர் நடப்பதை அறிந்து நாடு திரும்பி அங்குள்ள சிறுவர்களுக்கு தனது நடனத்தின் மூலம் ஊக்கமூட்டி வருகிறார். விபத்து, மோசமான அனுபவங்களால் ஏற்படும் மன பாதிப்பை தீர்க்கும் படிப்பை படித்திருக்கிறார். நடனம் மூலமும், தனது ஆலோசகர் பணி மூலமும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதற்கென கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. நடனமாடும் வீடியோக்களை நேரம் கிடைக்கும்போது இணைய இணைப்பு இருந்தால் பதிவிடுகிறார். அதில் அவர் கூறும் நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம் என்ற வாக்கியம்தான் பார்ப்பவர்களை கடுமையாக வேதனைப்படுத்துகிறது. 



 



கார்டியன் வீக்லி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்